மனிதநேய நண்பர்களே
வணக்கம்.!
கோடை வெயில்
வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.
அண்மையில், சாலை ஓரத்தில் அமர்ந்து
பூ,காய்கறி வியாபாரம் செய்யும் பெண்கள் சிலருக்கு உங்கள் உதவியால் நிழல் குடை அமைத்துக்
கொடுத்தோம்.
நம்முடைய உதவி கோடை வெயில் துவண்டு இருந்து அவர்கள் மனதைக்குளிர வைத்தது.
நிழல் குடை கேட்டு தொடர்ந்து நமக்குக் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
அவர்களின் தகுதியானவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

தாம்பரம்(2),பட்டாளம்(2) சைதாப்பேட்டை (1) ஆகிய மூன்று இடங்களைச் சேர்ந்த 5 பெண்மணிகளுக்கு
நிழல் குடை வழங்க முடிவு செய்து,
இது குறித்த தகவலை மனிதநேயர் செல்வமணி (திருவாரூர்)
அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
கருணை உள்ளம் கொண்ட அம்மா மனிதர்
உடனடியாக அதற்கான தொகையை அனுப்பி வைத்தார்.
மூன்று இடங்களுக்கும் சென்று உழைக்கும் பெண்கள் ஐவருக்கும் நிழல் குடை வழங்கினோம்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
குடைகள் வழங்கிய மனிதனை எதிர்த்து தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். குடை வழங்கும் நிகழ்ச்சிக்கு மனிதநேயர் சம்பத் (அசோக் நகர்) உடன் வந்திருந்தார்.
நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் மனித நேயருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது(திருக்குறள் 102)
பொருள்:
உற்ற காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறிது ஆயினும் அதன் பயன் இவ்வுலகை விடப் பெரியது . அளவிடற்கரியது ஆகும்.
– புரசை வெங்கடேசன்,
– உதவும் கைகள்,
– 9840914739
– 21.04.26




