மனநல காப்பகத்தில் உள்ள இளம் பெண்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே.!

சென்னையில் உள்ள
பெண்கள் மனநல காப்பகத்திற்கு நாம் தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இங்கு 51 பெண்கள் உள்ளனர். இளம் பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

இந்த மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு காலணிகள வாங்கிக் கொடுத்தோம்.

அங்கிருந்த நிர்வாகியிடம் பேசிக் கொண்டிருந்த போது,
அவர் நம்மிடம் வைத்த கோரிக்கை:

” மனநல மருத்துவர் மற்றும் கவுன்சில் வழங்கும் சமூக ஆர்வலர்களை வரவழைத்து மனநல பாதிப்பிலிருந்து இங்குள்ள பெண்கள் வெளி வருவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம். மருந்து மாத்திரை தேவைப்படுவோருக்கு அதையும் கொடுக்கிறோம்.

இது ஒரு புறம் இருக்க
இவர்களை சந்தோசமாக விளையாட வையுங்கள்,என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கேரம் போர்டு, பூப்பந்து விளையாட்டு, கைப்பந்து விளையாட்டு
போன்றவற்றில் ஈடுபடுத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு வரும் நிதி, அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து மாத்திரைக்கு சரியாக உள்ளது.

விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தாருங்கள் என்று நம்மிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கையை மனிதநேய நண்பர்களாகிய உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அங்கு இருக்கும் நம் சகோதரிகளுக்கு
விளையாட்டு உபகரணங்கள் வாங்கித் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.!

– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739 29 05 26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91