சாலையோர ஏழை எளிய மக்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்குமாறு கூறி,மனிதநேயர் பாலன் (ஓசூர்) ரூபாய் 3000 அனுப்பி இருந்தார்.
மனிதநேயர் வெங்கடேஸ்வரன் (திருநெல்வேலி)
ரூபாய் ஆயிரம் அனுப்பி வைத்திருந்தார்.
சாலையோரத்தில் பசியால் வாடிக் கொண்டிருந்த
25 பேருக்கு அறு சுவை நிறைந்த உணவு, இனிப்பு- தண்ணீர் பாட்டிலுடன் வழங்கினோம்.

அனைவரும் சுவைத்து உண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உணவு வழங்கிய மனித நேயர்களை வாழ்த்தினர்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப் புழி(திருக்குறள் 226)
பொருள்:
வறியவரின் பசியைப் போக்க வேண்டும், அதுதான் பொருள் வைத்திருப்பவர் அப்பொருளை சேமித்து வைக்கும் இடமாகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
21.03.26




