நுரையீரலில் ஏற்பட்ட புற்று நோய்க்காக
சிகிச்சை எடுக்க திருவாரூரில் இருந்து வந்த முதியவர் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மகளும் இருந்தனர்.
கீமோ தெரபிக்கு பிறகு
மூன்று வாரம் கழித்து மீண்டும் கீமோவுக்கு வரச் சொல்லி மருத்துவர்கள் கூறி, டிஸ்சார்ஜ் செய்திருந்தார்கள். அவர் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருந்தது.
அவரால் ரயிலிலோ பேருந்திலோ மறுபடியும் திருவாரூர் மாவட்டத்துக்கு பயணம் செய்யாத முடியாத நிலைமை.
அவர்கள் கொண்டு வந்திருந்த
2000 ரூபாய் செலவாகி இருந்தது.
ஆம்புலன்ஸ்க்கு விசாரித்து உள்ளார்கள் ரூபாய் 15,000.
கையில் பணம் இல்லாத நிலையில்,
நம்மைத் தொடர்பு கொண்டார்கள்.
மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது,
அவர்கள் நிலைமை மிகவும் வேதனையாக இருந்தது.
எப்படியாவது அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்க முடிவு செய்தோம்.
மனித நேய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
மனித நேயர் காளி
ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தார்.டீசல் மட்டும்
போட்டுக் கொள்ளச் சொன்னார்.
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் சென்று வர டீசலுக்கு ரூபாய் 6000 ஆகும் என்று தெரிவித்தார்கள்.

மனித நேயர் ஸ்ரீதர்(கருணை உள்ளங்கள் அறக்கட்டளை, போரூர் )
ரூபாய் 5000 அனுப்பி வைத்தார்.
ஒரு மனித நேயர்
ரூபாய் 1000 மற்றும்
இன்னொரு மனித நேயர் ரூபாய் 500 ம்
அனுப்பி வைத்தனர்.
டீசலுக்கு ரூபாய்
6000 கொடுத்தோம்.
மூன்று பேரின் உணவுச் செலவுக்கு ரூபாய் 500 கொடுத்து
ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தோம்.
நோயாளியுடன் கண்ணீர் மல்க நின்றிருந்த இந்த ஏழை குடும்பத்தின் கண்ணீரைத் துடைத்து
உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
காலத் தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.(திருக்குறள் 102)
பொருள் : உரிய காலத்தில் செய்யப்படும் உதவியின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் பயனை ஆராய்ந்து பார்த்தால் அது உலகை விடவும் பெரியது ஆகும்.
-புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
16.03.26




