ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது அர்ச்சகர். நீரிழிவு நோய் காரணமாக இரு கால்களையும் இழந்து விட்டார்.
மற்றபடி உடல், கைகள் நன்றாக உள்ளது.
அவருடைய குடும்பச் பொருளாதார சூழலால்
நிதி நெருக்கடியில் உள்ளார்.
மூன்று சக்கர வாகனம் இருந்தால் கோயிலுக்கு சென்று கடவுளுக்கு சேவை செய்வேன், இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு
நிம்மதியாக நாட்களை கழிப்பேன், என்கிறார்.
இவர் கோரிக்கையை மனிதநேய நண்பர்களிடம் பகிர்ந்தோம்.
ஒரு மனிதநேயர் உடனடியாக மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்தார்.
தன் பெயரைக் குறிப்பிட அவர் விரும்பவில்லை.
திருப்பூர் சிவனடியார்கள் திருக் கூட்டம் சார்பில் வீல் சேர் வாங்கி கொடுத்தார்கள்.
இரண்டு சாதனங்களையும் ஒப்படைத்த போது
வயது முதிர்ந்த அர்ச்சகர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.
வீல் சேரை வீட்டுக்குள்ளும் மூன்று சக்கர வாகனத்தை கோயிலுக்கு மற்றும் கடைத்தெருவுக்கு சென்று வர
பயன்படுத்திக் கொள்வேன், என்றார்.

கருணை உள்ளம் கொண்ட உமா மகேஸ்வரி மேடம்,
மனிதநேயம் மிகுந்த காவல் அதிகாரி திருநாவுக்கரசு
ஆகியோர்
உபகரணங்களை வழங்கும்போது
உடன் இருந்தனர்.
தனக்கு உதவி செய்த மனித நேயர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நாமும் அனைவரையும் வாழ்த்துவோம்.!
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.(திருக்குறள் 102)
-பொருள் :
உரிய காலத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதே ஆயினும்,
அதன் அளவை சீர்தூக்கிப் பார்க்குங்கால் கடலையும் விட அது பெரிது ஆகும்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
09.04.26




