தினமும் சாலையோரத்தில் அமர்ந்து உழைத்து வாழும் 75 வயது மூதாட்டிக்கு நிழல் குடை வாங்கி கொடுத்தோம்.!

மெரினா கடற்கரை, லூப் சாலையில், டூமிங் குப்பம் எதிரில்,
தினந்தோறும் 75 வயது மூதாட்டி ஆரோக்கியமேரி
சாலை ஓரத்தில் அமர்ந்து
கருவாடு வியாபாரம் செய்து வருகிறார்.
மீன்களை ஆய்ந்து கொடுத்து அதன் மூலமாகவும்
சிறு சிறு தொகையை ஈட்டுகிறார்.

காலை 10 மணிக்கு மேல் அவர் வெயிலால் கஷ்டப்படுவதை பார்த்து,
அவருக்கு நிழல் குடை வாங்கி கொடுத்தோம்.

இதற்கு உதவிய மனித நேயம் மிகுந்த ஹேமாவதி(அண்ணாநகர்)அவர்களை அந்த மூதாட்டி நெஞ்சார வாழ்த்தினார்.
உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நாமும் அவரை வாழ்த்துவோம்.!

அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36 )

பொருள் :
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாமல்
எப்போதெல்லாம் முடியுமோ அப்போது எல்லாம் அறம் செய்யுங்கள்.
இக்கட்டான சூழல் நேரும் போது ஒருவர் செய்த அறம் தான் பல உருவங்களில் வந்து துணை நிற்கும்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
16.03.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91