சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
அங்கு உள்ள 75 முதியோர்களுக்கு சரியான காலணிகள் இல்லை. எட்டு வகையான காலணிகள் ( 8 type of Size Nos) அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
இதில் 5 வகை வயது முதிர்ந்த பெண்களுக்கும் 3 வகை வயது முதிர்ந்த ஆண்களுக்கும் தேவை
நோய்த்தடுப்பில்
காலணி முக்கிய அங்கம் வகிப்பதை
நாம் அறிவோம்.

இந்த 75 பேருக்கு காலணிகள் வாங்கித் தரும்படி மனிதநேய நண்பர்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
இங்கு உள்ள வாஷிங் மெஷின் மிகவும் பழுதடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு
வந்துவிட்டது.
ஒரு வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்தால்
இந்த முதியவர்களுக்கு பெரும் பலன் தருவதாக இருக்கும்.! இதற்காகவும் உங்கள் கருணை பார்வையை கொஞ்சம் செலுத்துங்கள் நண்பர்களே.!
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
27.04.26




