உதவிக்கரம் நீட்டுங்கள் மனித நேய நண்பர்களே.!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா தெற்கு பூ வாணி குப்பத்தில் வசிக்கும் மிக மிக ஏழை குடும்பத்துக்கு நம்மாலான உதவிகளை செய்து வருகிறோம்.

இந்தக் குடும்பத்தில்
கண் பார்வையற்ற காது கேட்காத பேச முடியாது மூளை வளர்ச்சி குன்றிய
ஒரு தெய்வக் குழந்தை உள்ளது.

இந்த வீட்டின் மேற்கூரை சேதமடைந்து வெயிலாலும் மழையாலும் இந்தக் குழந்தை அவதிப்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தையின் தந்தையார் இதய நோயாளி. வருவாய் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

இந்த வீட்டுக்கு மேற்கூரை போட்டுக் கொடுக்கும்படி
அங்குள்ள தன்னார்வலர்கள் மூலம் நமக்கு கோரிக்கை வந்துள்ளது.

மேற்கூரைக்காக இப்போது பயன்படுத்தப்படும் நவீன ஷீட் போட்டு வீட்டை சரி செய்வதற்கு ரூபாய் 41 ஆயிரம் ஆகும் என்று தெரிகிறது.
மேலும், தரையில் படுத்து அவதிப்படும்
இவனுக்கு
மெத்தையுடன் கூடிய கட்டில் மற்றும் மின் விசிறி கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

உதவிக்கரம் நீட்ட மனிதநேய நண்பர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
‌. 9840914739
08.07.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91