இன்று, பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே. ரவீந்திரன் 5 வது நினைவு தினம்: முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கினோம்.!

பத்திரிகை உலகிற்கும் தமிழ் இலக்கிய உலகிற்கும் சிறந்த பங்களிப்பு செய்தவர் மறைந்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன்.

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இக் குழுமத்தில் இருந்து வெளிவந்த மலையாளம் இதழுக்கு ஆசிரியராகத் தொண்டாற்றி ஐயா. இராமச்சந்திர ஆதித்தனாரின்
பாராட்டுதல்களைப் பெற்றவர்.

தமிழ்,மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை மிக்கவர்.

சிறந்த மொழிபெயர்ப்பாளர், வரலாற்று ஆய்வாளர், நாவலாசிரியர் ஆகிய பன்முகங்களைக் கொண்டவர்.

தமிழக வரலாற்றில் இன்னமும் கூட களப்பிரர் காலகட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.
தன் பார்வையில் களப்பிரர் வரலாற்றை ஆய்வு செய்து நூலாக வெளியிட்டார். மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாமன்னன் அக்பர் குறித்த ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார்.
வரலாற்றுப் புதினங்கள் பல படைத்தார். ஆங்கிலத்தில் வெளியான சிறந்த படைப்புகளை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்து தமிழ் அன்னைக்குத் தொண்டு செய்தார்.

பேராளுமை கொண்டிருந்த இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.

கொரோனா காலத்தில் உதவும் கைகள் குழுவில் அங்கம் வகித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார்.
இவர் விட்டுச் சென்ற சேவையை இவருடைய துணைவியார்
தொடர்ந்து செய்து வருகிறார்.

ஐந்தாவது ஆண்டு நினைவு நாளை யொட்டி அவர் நினைவாக முதியோர் காப்பதற்கு மதிய உணவு வழங்கும்படி அவருடைய துணைவியார் கேட்டுக் கொண்டார். அதற்கான தொகையை அனுப்பி வைத்தார்.

நாம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள
காப்பகத்தை தேர்வு செய்தோம். இங்கு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் 130 பேர் உள்ளனர். இவர்களுக்கு இன்று(14.06.26) மதியம் அறுசுவை உணவு வழங்கினோம்.

நமது சமூகத்திற்கும் தமிழ் இலக்கிய உலகுக்கும் பத்திரிக்கையாளர் டி. கே .ரவீந்திரன் செய்த பங்களிப்பு மகத்தானது. தமிழ் கூறும் நல்லுலகில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் அவருக்கு நம்முடைய மலர் அஞ்சலியை உரித்தாக்குகிறோம் ‌!

-புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
14.06.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91