சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம்.
அங்குள்ள 15 வயதானவர்கள்
படுக்கை வசதி இல்லாமல் இரவு நேரத்தில் சிரமப்படுவதாக நமக்கு தெரிவித்தார்கள்.
அவர்களுடைய கோரிக்கையை
மனிதநேய நண்பர்களின் கவனத்திற்கு பகிர்ந்தோம்.
எட்டு மனிதநேய நண்பர்கள்
உதவிக்கரம் நீட்டினர்.

மனிதநேயர்
சங்கீதா
ஐந்து படுக்கைகள்
வாங்கிக் கொடுத்தார்.
இதேபோல மனிதநேயர்
சீனிவாசன் -3,
மனிதநேயர்
ராஜா மேனன்-2
மற்றும்
மனிதநேயர்கள்
பிரீத்தம், காயத்ரி சுபாஷ், நைனீஸ் பாபு, அனுப்வாசுகுட்டன், அஜித் பல்லாத்
ஆகியோர் தலா ஒரு படுக்கை வாங்கிக் கொடுத்தனர்.
தமிழ் புத்தாண்டு தினமான நேற்று
இந்தப் பதினைந்து படுக்கைகளையும் அந்த முதியோர் இல்லம் சென்று வழங்கினோம்.
படுக்கையை பெற்றுக் கொண்ட பதினைந்து முதியோர்களும்
வாங்கிக் கொடுத்த மனித நேயர்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நாமும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் அவர்களை வாழ்த்துவோம்.!
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
பயன்தூக்கார் செய்த நன்றி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.(திருக்குறள் 103)
பொருள்:
பிரதிபலன் எதிர்பாராமல் செய்யப்படும் உதவியின் அளவை சீர்தூக்கிப் பார்த்தோமானால் அது கடலையும் விட பெரிது
ஆகும்.
-புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
. 15.04.26




