மிகவும் நோயுற்ற வயது முதிர்ந்தவருக்கு மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 மற்றும் வயது முதிர்ந்த பெண்மணிக்கு கண் கண்ணாடி வாங்கி கொடுத்தோம்.!

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து
அண்மையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஒரு முதியவர் தன் மனைவி மகளுடன் வந்திருந்தார். த
கீமோ தெரபி சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு புறப்பட்டபோது
அவர் உடல்நிலை மோசமாக இருந்தது.

கையில் கொண்டு வந்திருந்த பணமும் காலியாகிவிட்டதால்
செய்வதறியாது திகைத்து நின்றனர்.

ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊர் அனுப்பி வைத்தோம்.

அவர்கள் தற்போது நம்மை தொடர்பு கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போக்குவரத்து செலவுக்கு
உதவி செய்ய கோரினார்கள்.

மிகவும் கருணை உள்ளம் கொண்ட நாகூர் சித்திக் பாய்
அவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தோம்.
அவரு உடனடியாக அந்த முதியவரின் மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 அனுப்பி வைத்தார்.

ஒரு வயது முதிர்ந்த ஏழைப் பெண்மணி கண் கண்ணாடி வாங்க ரூபாய் 2500 கேட்டிருந்தார்.
மனிதநேயர் நீலேஷ் (திருவள்ளூர்) கவனத்திற்கு இந்த கோரிக்கையை கொண்டு சென்றோம். அவர் உடனடியாக ரூபாய் 2500 அனுப்பி அந்த ஏழைப் பெண்மணியின் தேவையை நிறைவேற்றி வைத்தார்.

உதவி பெற்றவர்கள் மனித நேயர்களுக்கு
தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நாமும் அவர்கள் இருவரையும் வாழ்த்துவோம், பாராட்டுவோம்.

* ” காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது(திருக்குறள் 102).
பொருள்:
உரிய காலத்தில் செய்யப்படும் உதவியின் அளவு சிறியதாக இருந்தாலும் அதை சீர்தூக்கிப் பார்த்தோமேயானால்
இவ்வுலகை விடவாம் பெரிது ஆகும்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்,
9840914739
‌16.04.26.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91