மனிதநேய உள்ளங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 🙏

புதுச்சேரி அருகே (சுமார் 10 கி.மீ தொலைவில்) அமைந்துள்ள
கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில்,
பழங்குடியின இருளர் சமூகத்தை சேர்ந்த
30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
மிகவும் கடினமான சூழலில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்…
அந்த குடும்பங்களில் உள்ள
ஆணும் பெண்ணும் யாசகம் எடுத்தே வாழ்ந்து வருகின்றனர்…
ஆனால்…
அவர்களின் மனதில் ஒரு பெரிய கனவு இருக்கிறது —
“எங்கள் பிள்ளைகள் நல்ல படிப்பு படித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்” என்ற கனவு…


அந்த நம்பிக்கையோடு,
மிகுந்த வறுமையிலும் கூட
தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர்…
📚 ஆனால் நிஜ நிலை என்ன தெரியுமா?
👉 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள்
பேக் இல்லாமல்…
நோட்டு, பேனா, கல்வி உபகரணங்கள் இல்லாமல்…
மிகுந்த கஷ்டத்துடன் படித்து வருகின்றனர்…
🍚 அதோடு மட்டுமல்லாமல்,
அந்த 30 குடும்பங்களுக்கும் அடிப்படை உணவு பொருட்கள் கூட இல்லாமல்
தினசரி வாழ்வு போராட்டமாக மாறியுள்ளது…
💔 இந்த குழந்தைகளின் கண்களில் இருக்கும் ஆசையை பார்த்தால்
உதவி செய்யாமல் இருக்க முடியாது…
🙏 எனவே இந்த பதிவை பார்க்கும்
அனைத்து நல்ல உள்ளங்களையும்
இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்…
👉 கல்வி உபகரணங்கள் (School Bags, Notebooks, Pens…)
👉 மற்றும் 30 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்
உங்களால் முடிந்த அளவில் உதவி செய்யுங்கள்…
🌱 “கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி”
நாம் செய்யும் இந்த சிறிய உதவி,
ஒரு குழந்தையின் எதிர்காலத்தை ஒளிவிளக்காக மாற்றலாம்…
📞 தொடர்புக்கு:
புரசை வெங்கடேசன்
📱 +91 98409 14739

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91