நன்றியுரை

வியாசர்படியில் அமைந்துள்ள எங்கள் தேவாலயத்திற்கு 40 நாற்காலிகள் தேவையென “புரசை உதவும் கைகள் அறக்கட்டளை” மூலம் விண்ணப்பம் வைத்திருந்தோம்.

அந்த வேண்டுகோளை கடவுள் நிறைவேற்றியதற்கான கருவியாக திரு. புரசை வெங்கடேசன் ஐயா அவர்களை பயன்படுத்தினார். அவருடைய முகமாக அந்த 40 நாற்காலிகளையும் எங்கள் ஆலயத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்கு எங்கள் தேவாலயக் குடும்பம் சார்பாக திரு. புரசை வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த ஆண்டும் எங்கள் ஆலயத்தில் சிலுவை வைக்க வேண்டுகோள் வைத்தபோது, அதையும் நிறைவேற்றி தந்தவர் இதே திரு. புரசை வெங்கடேசன் ஐயா அவர்கள். அதன் பின் எங்கள் ஆலயத்தில் பல ஆன்மீக மாற்றங்கள் நடந்தது; அந்த தெருவில் கடந்து சென்றவர்கள் சிலுவையை நோக்கி வணங்கி சென்ற காட்சி எங்களை மகிழ்விக்கிறது.

இப்போது கிடைத்துள்ள இந்த 40 நாற்காலிகள் மூலம் எங்கள் ஆலயத்திற்கு வருகிற விசுவாசிகள், குறிப்பாக மூத்த வயதான அன்பர்கள், வசதியாக அமர்ந்து தேவனை ஆராதிப்பார்கள்.

திரு. புரசை வெங்கடேசன் ஐயா அவர்களும், அவருடைய குடும்பமும் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்க கடவுளிடம் மனமுவந்து வேண்டுகிறோம்.

மிக்க நன்றி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91