உடல் முழுக்க புண்ணுடன் அவதிப்படும் வடலூர், சிறுவனுக்கு வந்து குவிந்த மனித நேயர்களின் உதவிகள்.!

10 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் அபூர்வமான நோய் என்றும் உடல் முழுக்க புண் வந்து அந்த சிறுவன் அவதிப்படுகிறான் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக பார்க்க விரும்பினோம்.

இறைவா! இது போல துன்பம் யாருக்கும் வரக்கூடாது.!

புண் தொடர்ந்து ஆறாமல் இருந்ததால் அந்த சிறுவனின் ஒரு கையில் உள்ள அனைத்து விரல்களும் ஒரு காலில் விரல்களும் ஒட்டிக்கொண்டிருந்தன.

உடனடியாக நாம் செய்ய வேண்டியது, அவன் படும் அவஸ்தையிலிருந்து நிவாரணம் கொடுப்பதுதான்.
இந்த முடிவுடன் மனித நேய நண்பர்கள் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்றோம்.

மனிதநேயர் பாலாஜி (அமெரிக்கா) ரூ 5000,
மனித நேயர் பாலன் (ஓசூர்)ரூ 5000,
மனிதநேயர் மாரிமுத்து (உதவும் கைகள்) ரூபாய் 5000,
மனிதநேயர் ராஜா (உதவும் கைகள்) ரூபாய் 5000.
உதவும் கைகளில் இருந்து பெயர் கூற விரும்பாத மனிதநேயர் ரூபாய் 5000,
மனிதநேயர் நீலேஷ் (திருவள்ளூர்) ரூபாய் 3000 அனுப்பி வைத்தனர்.
பெயர் கூற விரும்பாத இரண்டு மனித நேயர்கள் தலா ரூ 1000, நான்கு மனித நேயர்கள் தலா ரூ 500 தொகையை அனுப்பி வைத்தனர்.

சிறுவனுக்கு உதவுவதற்காக வள்ளலாரின் வடலூர் நோக்கிப் புறப்பட்டோம்.

பால்ய சினேகிதர் பொறியாளர் கோவிந்தராஜ், தன் காரை எடுத்துக் கொண்டு வந்தார்.

ஏர்கூலர், ஸ்டேன்டிங் ஃபேன், காற்றுப் படுக்கை மற்றும் இலவம் பஞ்சு மெத்தை க்ஷஆகிய 4 பொருட்களுடன் சிறுவன் வீட்டை அடைந்தோம்.இதில், லட்சுமி நாராயணன் என்ற மனித நேயர்
ஸ்டேன்டிங் ஃபேன் வாங்கி, பாண்டிச்சேரியில் தயாராக வைத்திருந்தார்.
மனித நேயர்கோபிநாத் (நெய்வேலி) காற்றுப் படுக்கையுடன் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நின்றிருந்தார். காரில் சென்ற போது வழியில் இவற்றை சேகரித்துக் கொண்டோம். ஏர்கூலர் 125 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும்.

ஃபேன் மற்றும் ஏர்கூலரை எளிதாக மின் இணைப்பில் பயன்படுத்தும் வகையில் ஜங்சன் பாக்ஸ்சும் வாங்கிச் சென்றோம்.

இவை தவிர,அந்த சிறுவனுக்கு 2 மாதம் வைத்து சாப்பிடும் வகையில் பாதாம் பருப்பு உள்ளிட்ட சத்துப் பொருட்களையும், உடலில் இருக்கும் புண்களை சுத்தம் செய்து மருந்து போடும் வகையில் மருத்துவ பொருட்களையும் வாங்கிச் சென்றோம்.

அரும்பாக்கத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேய சகோதரி, அந்த சிறுவன் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கி, கூரியர் வாயிலாக அவனுக்குத் தேவைப்படும் சத்தான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

எங்கள் இருவர் தவிர ,நண்பர் குமார்(கடலூர்,புதுவைமாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர், மனிதநேயர் ஆடலரசன் ஆகியோரும் வந்தனர்.

அந்த சிறுவனின் தாயார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறுவன் அருகில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினோம். சில நாட்களில் உன் உடம்பில் உள்ள புண்கள் எல்லாம் ஆறிவிடும். நீ ஓடி ஆடி விளையாடலாம், என்று சொன்னவுடன் அந்த சிறுவன் என் மடியில் வந்து அமர்ந்தான்.
அடுத்த முறை இந்த சிறுவன் என் மடிக்கு வரும்போது பூரண குணமடைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு,நாங்கள் சென்னை திரும்பிய பிறகு அந்த தாயாரிடம் இருந்து போன் வந்தது. “என் மகன் முதல் முறையாக நன்கு தூங்கினான்” என்று.

நாங்கள் சென்று திரும்பிய களைப்பை இந்த வார்த்தை மின்னல் வேகத்தில் போக்கியது.

இந்த சிறுவனுக்கு உதவிகளை கொட்டி, அவனுடைய துன்பம் தீர்வதற்கு காரணமாக இருந்த அத்தனை மனித நேயர்களுக்கும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.!

எனக்குத் தெரிந்த மருத்துவர்களிடமும் இந்த சிறுவன் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம்.
சிறுவனைப் பீடித்து இருக்கும் அபூர்வ நோயைக் குணப்படுத்த உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று.!

அவர்களும் சிறுவனின் முகவரியை வாங்கி வைத்திருக்கிறார்கள். சமயம் கிடைக்கும் போது நேரில் சென்று சிறுவனைப் பார்த்து என்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.

அந்த சிறுவன் விரைவில் பூரண குணமடைவான் என்ற நம்பிக்கை உள்ளது.
நீங்களும் பிரார்த்தியுங்கள்! வாழ்த்துங்கள்.!!

(இந்த சிறுவனுக்கு உதவி செய்ய விரும்பும் மனிதநேயமிக்க தோல் மருத்துவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால், சிறுவனைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதற்கு வேண்டிய
அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயாராக உள்ளோம்)
💐💐💐💐🙏🙏🙏🙏
புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
14.09.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91