மாற்றுத்திறனாளி பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கினோம்.!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாற்று திறனாளி பெண்கள் நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்கள்.

இந்த சகோதரிகள் இருவரும் முறைப்படி தையல் கற்றவர்கள்.
இவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுப்பது இரண்டு குடும்பங்களுக்கு ஒளியேற்றுவதற்கு சமம்.
இந்தத் தகவல்களை மனிதநேய நண்பர்களிடம் பகிர்ந்தோம்.

அயல்நாட்டில் வசிக்கும் ஒரு மனிதநேயர் ஒரு தையல் இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்தார்.
இவருடைய பெயரை கேட்டபோது தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள பெண்கள் மன நல காப்பகத்திற்கு 60 நாற்காலிகள் வாங்கி கொடுத்தவர். அங்கு உள்ளவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது வசதியாக நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக அந்த உதவியை செய்தார்.

மற்றொரு பெண்ணுக்கு திருச்சி லால்குடியை சேர்ந்த மனித நேயர் வில்சன்
தையல் இயந்திரத்துக்கு ஏற்பாடு செய்தார்.

எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆறு மாதம் மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால்,
மனித நேயர்கள் இருவரும் வாங்கிக் கொடுத்த தையல் இயந்திரங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை
மனிதநேயர் ஆடலரசன் (பாண்டிச்சேரி)
கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் மனிதநேயர் குமார்
இருவரிடமும் ஒப்படைத்தோம்.

இருவரும் நேரில் சென்று சகோதரிகள் இருவரிடமும் தையல் இயந்திரத்தை ஒப்படைத்தனர். அதோடு, இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்களும் வாங்கி கொடுத்தோம்.மனித நேய நண்பர்கள் சிலர் அனுப்பி வைத்த தொகை இதற்கு உதவியது.

மாற்றுத்திறனாளி சகோதரிகள் இருவரும் , தையல் இயந்திரம் மற்றும் மளிகை பொருட்கள்
வாங்கி கொடுத்த மனிதநேயர்களுக்கு தங்கள்
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நாமும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் மனித நேயர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.!

பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது(திருக்குறள் 103)

பொருள்:
பிரதிபலன் எதிர்பாராமல்
ஒருவர் செய்யும் உதவி
அளவிட முடியாத தன்மை கொண்டது.
அதன் மதிப்பை ஆராயும் பட்சத்தில் அது கடலையும் விட பெரிதாகும்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739,
28.03.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91