பள்ளிக்குச் செல்வதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி சிறுமிக்கு ரூ. 13, 500 விலை கொண்ட 3 சக்கர வாகன பேட்டரி வாங்கிக் கொடுத்தோம் 11,12 பயிலும் 2 மாணவிகளுக்கு தலா ரூ 1000 மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்தோம்.

மனித நேய நண்பர்களே,

வணக்கம்.!

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி. கூர்த்த அறிவு படைத்தவள்.படிப்பில் படுசுட்டி.

இவள் வீட்டுக்கும் பள்ளிக்கூடத்திற்கும்
சுமார் 2 கிமீ தூரம்.

கால்கள் இரண்டும் மிகவும் பலவீனமாக இருந்ததால் பள்ளிக்குச் செல்வதற்கு யாராவது ஒருவர் துணைக்கு வேண்டும். இந்தக் குறை நீங்கி , தானே சுயமாக பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்து நன்கு படிப்பதற்கு ஏதுவாக அவளே இயக்கிச் செல்லும் வகையில் பேட்டரி பொருத்தப்பட்ட
மூன்று சக்கர வாகனம் உங்கள் உதவியுடன் 1 வருடத்திற்கு முன்பு வாங்கி கொடுத்தோம்.

அந்த வாகனத்திற்கு பேட்டரி தீர்ந்து போய் கடந்த ஒரு மாதமாக
மிகவும் சிரமப்பட்டு வந்தாள். அந்த பேட்டரி விலை ரூபாய் 13 ஆயிரத்து 500. அதை வாங்கித் கேட்டிருந்தாள்.

இந்த சமயத்தில் உதவும் கைகளில் *அங்கம் வகிக்கும் மனிதநேயர் ராஜா அவர்கள் தன் மனைவி பிறந்த தினத்தை ஒட்டி
ரூபாய் 8500 அனுப்பி வைத்து நல்ல காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார்.

மாற்றுத்திறனாளி சிறுமி வாகனத்தில் பேட்டரி வாங்கி கொடுக்க இந்தத் தொகையை பயன்படுத்தி க் கொள்ளட்டுமா என்று சொல்லி அவருடைய சம்மதத்தைக் கேட்டோம். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

இதே போல ரூபாய் 500, 1000, 2000 என்று சில மனிதநேய நண்பர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.அந்த வகையில் ரூபாய் 5000 சேர்ந்தது.

மனித நேயர் நண்பர் கோவிந்தராஜுடன்
கடைவீதிக்கு விரைந்து சென்று ஏற்கனவே விசாரித்து வைத்து இருந்த கடையில் பேட்டரியை வாங்கினோம்.3 வருட உத்தரவாத சான்றையும் வாங்கிக்
கொண்டோம். உடனே அந்த பேட்டரியை கூரியர் மூலம் அந்த சிறுமிக்கு அனுப்பி வைத்தோம். அந்த சிறுமியை மகிழ்ச்சியுடன் பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கூடம் செல்லும் வீடியோவை அனுப்பி வைத்தாள்.

வருங்காலத்தில் ஒரு பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க உள்ள அந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மனிதநேயர் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் நம்மைத் தொடர்பு கொண்டு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தரும்படி கேட்டு இருந்தார்கள். இருவரும் நன்கு படிக்கக் கூடியவர்கள் ஆவர் 11, மற்றும் 12 வகுப்பில் படித்து வருகிறார்கள்.

இவர்கள் கேட்ட புத்தகங்களின் விலை குறித்து விசாரித்தபோது ஆளுக்கு ரூபாய் 1000 வீதம் மொத்தம் 2000 ரூபாய் ஆகும் என்று தெரிந்தது.

மனித நேய நண்பர்களிடம் உதவி கேட்டிருந்தோம்.

மனிதநேயர்
நீலேஷ்( திருவள்ளூர் ) ரூபாய் 1000.

கருணை உள்ளம் கொண்ட
திருமதி.சாந்திஆறுமுகராஜ்(திருவான்மியூர்)
ரூபாய் 1000.
அனுப்பி வைத்தனர்.

இந்தத் தொகையை வைத்து மாணவியர் இருவருக்கும் நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தோம்.

பயன்பெற்ற அனைவரும் அவர்களுடைய பெற்றோருடன் சேர்ந்து தங்களுக்கு உதவிய மனிதநேயர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது”.(திருக்குறள் 102)

பொருள்:
உரிய நேரத்தில் செய்யப்படும் உதவியின் அளவு
எத்தகையது என்றால்
இந்த உலகை விடவும் பெரிது ஆகும்.

– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்,
– 9840914739
– 01.07.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91