மனிதநேயர் ஞானபிரகாஷ் அவர்கள்(சிங்கப்பூர் ) தம் இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம்.
மறைந்த தம் மாமனார்- மாமியார் (திரு நோயல் டெல்காஸ் திருமதி. லீனா டெல்காஸ்) நினைவாக முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போருக்கு வடை பாயசத்துடன் அறுசுவை மதிய உணவு வழங்கும்படி கூறினார். அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.
திருமுல்லைவாயலில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாய்ராம் முதியோர் இல்லத்தில் 50 வயோதிக பெண்கள் உட்பட 85 பேர் உள்ளனர்.அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினோம்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
அன்னதானம் வழங்கிய மனித நேயர் ஞானப்பிரகாஷ் மற்றும் அவர் குடும்பத்தையும்
வாழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் பால்ய நண்பர் மனித நேயர் கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”.(திருக்குறள் 226)
பொருள்:
இல்லாதோருக்கு உணவு வழங்கி அவர்களுடைய பசியைப் போக்க வேண்டும்.அதுதான் பொருள் வைத்திருப்போர் அப்பொருளை உரிய இடத்தில் சேர்த்து வைக்கும் இடமாகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
11.10.25




