கருணை உள்ளம் கொண்ட நிர்மலாமலர் அவர்கள் (மலேசியா) நம்மைத் தொடர்பு கொண்டு முதியவர்கள் வாழும் ஒரு இல்லத்திற்குச் சென்று அறுசுவை மதிய உணவு வழங்குமாறு கூறினார்.அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.
நண்பர் கோவிந்தராஜுடன் திருமுல்லைவாயலில் உள்ள சாய்ராம் முதியோர் இல்லத்திற்கு சென்றோம்.
ஆண்களும் பெண்களுமாக முதியவர்கள் 85 பேர் அங்கு உள்ளனர்.

அவர்களுடைய தேவை அறிந்து, வடை பாயாசத்துடன் இன்று மதியம் அறுசுவை உணவு வழங்கினோம். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் உட்கொண்டனர்.
உணவு வழங்கிய நிர்மலா மலர் அம்மையாருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நாமும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அக்ஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி(திருக்குறள் 226).
பொருள்:
வறியவர்களின் பசியைப் போக்க வேண்டும். அதுவே பொருள் உடையவர்களுக்கு அதை சேமித்து வைப்பதற்கு உரிய இடமாகும்.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 28.10.25




