திருமதி. குழந்தையம்மாள் அம்புரோஸ் 26வது வருட நினைவு நாள்;
திரு. R N அம்புரோஸ் 25வது வருட நினைவு நாள்:
இவர்கள் மனித நேயர் ஞானப் பிரகாஷ் அவர்களின் பெற்றோர் ஆவர்.
தம் பெற்றோர் நினைவாக 2 இல்லங்களில் அறுசுவை உணவு வழங்க ஏற்பாடு செய்யும்படி நம்மிடம் தெரிவித்து அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.
திருமுல்லைவாயிலில் உள்ள முதியோர் இல்லம் மற்றும்
மாதவரத்தில் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்டு நலமடைந்து வருவோர் இல்லம்.
இந்த இரண்டு இல்லங்களில் உள்ள 130 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.

தன் வீட்டில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் அன்னதானம் வழங்குவது மனிதநேயர் ஞானப்பிரகாஷ் அவர்களுக்கு வழக்கம்.
தம் பெற்றோரை நினைவுகூர்ந்து வணங்கும் அதே வேளையில் ஏழைகளுக்கு வயிறார உணவு வழங்கும் அவருக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
” அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”(திருக்குறள் 226)
பொருள்:
இல்லாதோரிர் வயிற்றுப் பசியை போக்க வேண்டும். பொருள் வைத்திருப்போர் அப்பொருளை தம் பிற்காலத்திற்காக சேர்த்து வைக்கும் இடம் அதுதான்.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 22.04.25




