சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் நாகராஜ்.
மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தவர்.
எடை அதிகம் கொண்ட செயற்கைக் காலை பொருத்திக்கொண்டு பத்து ஆண்டுகள் எப்படியோ கழித்து விட்டார். தற்போது அது பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது.
மன உறுதியுடன் ஆட்டோ ஒட்டி குடும்பத்தை கவனித்து வந்தார்.
புதிதாக செயற்கை கால் பொருத்தினால் தான், ஆட்டோ தொழிலை தொடர முடியும் என்ற நிலை தற்போது வந்த பிறகு நம்மை தொடர்பு கொண்டார்.
கருணை உள்ளம் கொண்ட “அரும்பாக்கம் மேடம்” அவருக்கு செயற்கை கால் ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இலகுவான செயற்கை கால் ஏற்பாடு செய்ய ரூபாய் 19,000 ஆனது.
“அரும்பாக்கம் மேடம்” கொடுத்தது செயற்கை கால் மட்டுமல்ல. ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரம்.
எடை குறைந்த- உறுதியான அந்த செயற்கைக்காலை பொருத்திக் கொண்டதும் ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அன்பு சகோதரர் நாகராஜின் மனைவியை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
படித்த பெண்ணான அவர், ஒரு கால் செயற்கை கால் என்ற போதிலும் நாகராஜின் மன உறுதி மற்றும் குண நலனுக்காக அவரை வாழ்க்கைத் துணைவராக மகிழ்ச்சியுடன் ஏற்றவர்.
மங்கையர் குலத்தில் முன்மாதிரியாக உள்ள பெண்களில் இவரும் ஒருவர். பாராட்டுக்குரியவர்.
ஆட்டோ டிரைவர் நாகராஜிக்கு செயற்கைக்காலை வழங்கச் சென்றபோது, வழக்கம்போல பால்ய நண்பரும் பொறியாளருமான மனிதநேயர் கோவிந்தராஜ், எமிமா அறக்கட்டளை நிறுவனர் கருணை உள்ளம் கொண்ட எஸ்தர் மேடம் உடன் வந்தனர்.

உதவி பெற்ற நாகராஜ் மற்றும் அவருடைய துணைவியார் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை அரும்பாக்கம் மேடத்துக்கு தெரிவித்துக் கொண்டனர்.
உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நாமும் அவரை மனதார வாழ்த்துவோம்.
” காலத்தி னாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணவப் பெரிது.”(திருக்குறள் 102)
பொருள்:
உரிய நேரத்தில் செய்யப்படும் உதவியின் அளவு சிறிது ஆயினும் அதை அளவிடும் பட்சத்தில் அது உலகை விடவும் பெரிதாகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
21.04.25




