திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம், பி.வி. களத்தூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சாந்தி.
கைகளால் தவழ்ந்து செயல்படும் பெண்மணி.
தையல் கலை படித்து சான்றிதழ் வைத்துள்ள இவர், நம்மிடம் தையல் இயந்திரம் கேட்டிருந்தார்.
வீட்டில் இருந்தே ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்வார் என்பதால் இவருக்கு நண்பர்களிடம் உதவி கேட்டு இருந்தோம்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மனிதநேயர் ரூபாய் பத்தாயிரம் அனுப்பி வைத்தார்.
மனித நேயர் ஸ்ரீராம் சார் (உதவும் கைகள்) ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினார்.
ரூபாய் 50, 100 ,200,500 என்று மனித நேயர்கள் பலர் உதவிக்கரம் நீட்டினர்.
இந்தத் தொகையைக் கொண்டு தரமான, மோட்டார் வைத்த தையல் இயந்திரம் வாங்கினோம். ஊசி, நூல்கண்டு, கத்திரிக்கோல் உள்பட தையல் தொழிலுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கினோம்.
வழக்கம் போல, ஆருயிர் நண்பர் கோவிந்தராஜ் உடன் வந்தார். மனித நேயர்கள் சம்பத், ஸ்ரீ கணேஷ் சுப்ரமணியன் செங்கல்பட்டு சக்திவேல் ஆகியோரும் வந்தனர்.

அந்தப் பெண்மணியிடம் தையல் இயந்திரத்தை வழங்கிய போது, அவரும் அவருடைய வயதான தந்தை உள்பட குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தனக்கு இந்த அரிய உதவியை வழங்கிய அனைவருக்கும் மாற்றுத்திறனாளி சாந்தி தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (திருக்குறள் 101).
பொருள்:
பிரதிபலன் எதிர்பாராமல் ஒருவர் செய்யும் உதவிக்கு கைமாறாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
28.08.25




