85 வயது தாயாருக்கு கட்டில், படுக்கை,ஃபேன் வாங்கிக் கொடுத்தோம்!

சென்னை, பட்டாபிராமில் உள்ள மனநல காப்பக த்திற்கு கடந்த வாரம் சென்று அறுசுவை உணவு வழங்கினோம்.

அப்போது அங்கு தங்கியிருந்த 85 வயது முதிய பெண்மணி நம்மிடம்,
இரவு வேளையில் தூங்காமல் கஷ்டப்படுகிறேன் எனக்கு ஒரு கட்டில், ஃபேன் வாங்கித் தர முடியுமா ?கேட்டார்.

அவருடைய கோரிக்கையை நண்பர்களிடம் பகிர்ந்தேன்.

மனிதநேயர் பாலாஜி (அமெரிக்கா) பேசினார்.
,”இந்த வயது முதிர்ந்த தாயாருக்கு என்னென்ன உதவிகள் வேண்டும்” என்று கேட்டார். அவர்கள் கேட்டஅனைத்தையும் வாங்கிக் கொடுக்கும்படி சொல்லி அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.

தரமான கட்டில், அதில் விரிக்கும் வகையில் காற்றுப்படுக்கை, நின்று சூழலும் மின்சார ஃபேன், இரண்டு செட் புத்தாடை ஆகியவற்றுடன் விரைந்து சென்றோம்.
நண்பர் மனிதநேயர் கோவிந்தராஜ் உடன் வந்தார்.

ஸ்டாண்டிங் ஃபேனை உடனடியாக நிறுவி செயல்படுத்தும் வகையில் பிளக் உள்ளிட்ட மின்சாதனங்களையும் வாங்கி சென்றிருந்தோம்.

அனைத்தையும் உடனடியாக தயார் செய்து அந்த வயதான தாயாரை அவர்கள் விரும்பி கேட்ட கட்டிலில் படுக்க வைத்தோம். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மனிதநேயர் பாலாஜியை நெஞ்சார வாழ்த்தினார்.

சென்னையைச் சேர்ந்த ஓர் ஏழை குடும்பம் நம்மிடம் அரிசி மளிகைப் பொருட்கள் கேட்டிருந்தது. அதையும் மனித நேயர் பாலாஜி வாங்கிக் கொடுத்தார்

மனித நேயர் பாலாஜி ஏற்கனவே நம் மூலமாக ஏழை எளிய மக்கள் மாற்றுத் திறனாளிகள்- மாணவர்களுக்கு
உதவிகள் செய்தவர்.
அவருக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பிலும் நம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.💐🙏

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது(திருக்குறள் 101)
பொருள்:

பிரதிபலன் எதிர்பார்க்காமல் கருணை உள்ளத்தோடு ஒருவருக்கு செய்யப்படும் உதவிக்கு கைம்மாறாக இம்மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.

– புரசை வெங்கடேசன்
‌. உதவும் கைகள்,
9840914739
‌‌. 28.05.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91