அந்தத் தாய் ஒரு கடையில் தினம் ரூ 250 சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறார். கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் வாகை மலர் என்ற மாணவியும் காது கேளாத வாய் பேசாத மகனும் உள்ளனர்.
இந்தத் தாயார் நம்மிடம் தொடர்பு கொண்டு, கல்விக் கட்டணம் ரூ 31000. செலுத்தினால் தான் என் மகள் செமஸ்டர் தேர்வு எழுத முடியும், என்று கண்ணீர் மல்க கூறினார்.
இதுபோன்ற மாணவ மாணவியருக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் மனிதநேயர் ஞானப்பிரகாஷ் அவர்களின் கவனத்திற்கு இந்தத் தகவலை கொண்டு சென்றோம்.
உடனே மனிதநேயர்ஞானப்பிரகாஷ், “தந்தை இல்லாமல் சொந்த முயற்சியால் இந்த அளவு படித்து வந்திருக்கும் அந்தக் குழந்தைக்கு கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும், நீங்கள் சென்று அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் பேசி எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து, என்னிடம் பேசுங்கள்” என்று தெரிவித்தார்.
என் பால்ய நண்பர் பொறியாளர் மனிதநேயர் கோவிந்தராஜ் தன் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு உடனடியாக வந்தார். சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.
நாங்கள் உடனடியாக விரைந்து சென்று அந்த கல்லூரி முதல்வரிடம் பேசினோம். அவரும் கருணை உள்ளம் கொண்டவர். தங்கள் கல்லூரியின் நிலைப்பாட்டை தெரிவித்து, இந்த மாணவிக்காக ரூபாய் 2000 குறைத்துக் கொள்வதாக கூறினார்.

உடனடியாக மனிதநேயர் ஞானபிரகாஷ் தொகையை அனுப்பி வைத்தார்.
மாணவி மற்றும் அவருடைய தாயார் கல்லூரிக்கு வந்தனர்.
ரூ29,325. கட்டணம் கல்லூரிக்கு செலுத்தினோம்.
ரூபாய் 2500 மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தோம்.
இந்த வேலையை முடித்த போது மதியம் கடந்திருந்தது. அவர்கள் இருவரும் பசியால் வாடியிருந்தனர். அருகில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களை சாப்பிட வைத்தோம்.
தொடர்ந்து குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்துச் சென்று,
அந்த மாணவிக்கு பிடித்த மூன்று செட் டிரஸ் மற்றும் செருப்பு வாங்கி கொடுத்தோம்.
வாய் பேசாத காது கேளாத அந்த தாயாரின் மகனுக்கு இரண்டு செட் டிரஸ் வாங்கிக் கொடுத்தோம்.
இதோடு செலவுக்கு ரூபாய் 2500 ரூபாய் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.
மனிதநேயர் பாலசுப்ரமணி ஐயா ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்களை வாங்கி அவர்கள் வீட்டுக்கே கொண்டு போய் கொடுத்தார்.
மாணவியின் தாயார் அதிகாலையில் நம்மிடம் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். மாலைக்குள் அவர் வேண்டியதையும் அவர்கள் கேட்காமலேயே புத்தாடைகளையும் தேவைப்பட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தோம்.
மனிதநேயர் ஞானபிரகாஷ் அவர்கள் செய்து வரும் நற்பணிகள் நாம் அறிந்ததே. நம் மூலமாக நிறைய செய்துள்ளார். நமக்குத் தெரியாமல் எவ்வளவு செய்திருப்பாரோ?.
தந்தை இல்லாத பிள்ளைகளின் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது
என்பதில் மிகவும் அக்கறை செலுத்துபவர்.
அவரிடம் கல்வி உதவி பெறுபவர்கள் பொறுப்புடன் அந்த உதவியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும். இதைத்தான் அவர் விரும்புகிறார். அவருக்கு செய்யும் கைம்மாறாக கருதி மாணவ மாணவியர் படிக்க வேண்டும்.
மனித நேயர் ஞானப்பிரகாஷ் மற்றும் அவருடைய அன்புக் குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.(திருக்குறள் 315).
பொருள்:
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி உதவி செய்ய முற்படாமல் இருக்கும் ஒருவருக்கு அறிவு இருந்தும் பலன் இல்லை.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
03.05.25.




