முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் படுக்கையில் வாழ்ந்து கொண்டிருந்த வாலிபரை நிற்க வைத்தோம்.!

இந்த நவீன உலகில் மருந்து முழுமையாக கண்டுபிடிக்கப்படாத பாதிப்புகளில் ஒன்று முதுகுத்தண்டு பாதிப்பு.
மரத்தில்- மாடியிலிருந்து விழுவதன் காரணமாக மற்றும் சாலை விபத்தில் சிக்கியதன் விளைவாக இப்பிரச்சனை ஏற்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்ளார்கள்.

இவர்களுக்கு உதவுவதை நம் சேவையின் ஓர் அங்கமாக வைத்துள்ளோம்.

இவர்கள் உலகம் மிகக் கொடியது. நான்கு சுவற்றுக்குள் வருடக் கணக்கில் இருக்க வேண்டும். மல-ஜலம் கழிப்பதற்கு உதவி வேண்டும்.

பெற்றோர் அல்லது நல்ல வாழ்க்கைத் துணை உள்ளவர்கள் கூடவே திட மனம் உள்ளவர்கள் சில காலம் கூடுதலாக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கு அற்ப ஆயுள் தான். மனநலம் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் உண்டு. எனவேதான் இவர்கள் மீது கூடுதல் இரக்கம் காட்டி வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கீழ்க்கட்டளையில் இருந்து, ரமேஷ் என்ற முதுகுத்தண்டு நோயாளி உதவி கேட்டார்.

படுக்கையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். ஆண்டுகள் பல ஆகிவிட்டது. ஆனால், வாழ்க்கையில் நம்பிக்கை மாறாமல் உள்ளேன்.
என்னைப் போன்றோருக்கு உதவக் கூடிய “நவீன உபகரணம்” உள்ளது. காலில் இருந்து இடுப்பு வரை இரும்புராடு உடன் அதை வடிவமைக்கிறார்கள். அதை மாட்டிக் கொண்டு வாக்கருடன்,
உட்கார, நிற்க முடியும். அப்போது ஏற்படும் ரத்த ஓட்டம் காரணமாக படிப்படியாக நடக்கவும் வாய்ப்புள்ளது.
அதை எனக்கு வாங்கித் தர முடியுமா? என்று கேட்டார்.

“என்னுடைய பெற்றோர் சாலையில் பூ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள்.
அன்றாட செலவுக்கே போதுமானதாக உள்ளது. கூடவே எனக்கும் பணிவிடையும் செய்கிறார்கள். எனக்கு உதவி செய்தால், நானும் உட்கார்ந்து ஏதாவது வேலை பார்ப்பேன்.” என்றார்.

அவருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டோம்.

அவருடைய கோரிக்கையை நண்பர்களிடம் பகிர்ந்தேன்.

அவர் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனிதநேயர் குமார் (கொளத்தூர்) என்பவரை தொடர்பு கொண்டேன். அவர் இது போன்ற உபகரணங்களை செய்து கொடுப்பவர்.

என்னிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்று அவரைப் பார்த்தார்.

அந்த உபகரணம் மாற்றுவதற்கு இவர் தகுதியானவர்தான் என்று கூறி, இதை வடிவமைத்துக் கொடுப்பதற்கு இருபதாயிரம் ரூபாய் ஆகும் என்றார்.

இதற்கான பொறுப்பை மனித நேயர் கிஷோர் குமார் (வண்ணாரப்பேட்டை) ஏற்றுக்கொண்டார். அவருடைய வங்கிக் கணக்குக்கு அந்தத் தொகையை அனுப்பி வைத்தார்.

அந்த உபகரணத்துடன் ரமேஷ் வீட்டுக்கு மனித நேயம் குமார் சென்று அந்த உபகரணத்தை அவருக்குப் பொருத்தி விட்டார். அதை எப்படிப் பயன்படுத்துவது பராமரிப்பது என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

கருணை உள்ளம் கொண்ட மேரி அம்மையாரும்  முதுகுத்தண்டு நோயாளிகளின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறது என்பதை முதன்முதலாக நேரில் பார்ப்பதாகக் கூறி கண்ணீர் சிந்தினார்.

நீண்ட காலம் படுக்கையில் இருந்த ரமேஷ் முதல் முறையாக உட்கார்ந்தார், நின்றார்.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய முகத்தில் புதிய நம்பிக்கை ஊற்றெடுத்ததைக் காணமுடிந்தது. அந்தப் பிரகாசம் நம்மையும் மகிழ்வித்தது.

மனித நேயர் கிஷோர் குமாருக்கு தம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நாமும் அவரை வாழ்த்துவோம், பாராட்டுவோம்.!

“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வாகனமும் ஆற்றல் அரிது” .(திருக்குறள் 101).

பொருள்:
பிரதிபலன் எதிர்பாராமல் ஒருவர் செய்யும் உதவிக்கு வையகத்தையும் வாகனத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆகாது.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
10.08.25.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91