உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு, அபூர்வ நோயால் அவதிப்பட்டு வரும் வடலூர் சிறுவனுக்கு காற்றுப் படுக்கை , மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வடலூர் சென்று கொடுத்துவிட்டு வந்தோம் அல்லவா?
அந்த சிறுவன் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அவனுடைய நோயை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் மருத்துவர்கள் உள்ளனர்.
வடலூர் சென்று நான் பார்த்த போது அவனுடைய கைவிரல்களும் கால் விரல்களும் ஒட்டிக் கொண்டிருந்தன. இப்போது கைவிரல்களை பிரித்து கட்டுப்போட்டு வைத்துள்ளார்கள். அடுத்ததாக ஒட்டிக் கொண்டிருக்கும் கால் விரல்களை பிரிக்க உள்ளார்கள்.
அவனுடைய தாயார் கைவசம் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டது. நம்மிடம் உதவி கேட்டார்கள். ஏற்கனவே, மனிதநேய நண்பர்களாகிய நீங்கள் கொடுத்த தொகையை கொடுத்துள்ளோம்.
முதலில் ரூ.3000 அடுத்ததாக ரூபாய் ரூ10,000 கொடுத்து வந்தோம்.
மேலும், ஒரு மனிதநேயர் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி, சிறுவனின் தாயாரிடம் கொடுக்கும்படி கூறியிருந்தார்.

நானும் நண்பர் கோவிந்தராஜனும் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனைக்குச் சென்று அந்தத் தொகையை சிறுவனியின் தாயாரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். சிறுவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிறுவன் இருக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு இயன்ற உதவி செய்யும்படி மனிதநேய நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த சிறுவன் பூரண குணமடைய, பிரார்த்திக்குமாறு உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.
இதுவரை உதவி செய்த மனிதநேய நண்பர்களுக்கு உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.!
” காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”(திருக்குறள் 102)
பொருள்:
ஒருவருக்கு உரிய காலத்தில் செய்யப்படும் உதவியானது எத்தகையது எனில்,
பரந்து விரிந்த இந்த உலகத்தை விடவும் பெரிதானது ஆகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
. 24.10.25




