சிறுவன் அகத்தியன் குணமடைய ஏற்கனவே ரூ 18,000 வழங்கினோம் அல்லவா? அவன் மருத்துவ செலவுக்காக மேலும் 10,000 வழங்கினோம்!

வடலூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அகத்தியன் அபூர்வமான வியாதியால் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான்.

புண்களால் அவன் அனுபவித்து வரும் கஷ்டத்தை போக்க மனிதநேய நண்பர்களாகிய நீங்கள் வழங்கிய காற்றுப் படுக்கை, நின்று சுழலும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை வடலூருக்கு சென்று அவனுக்குக் கொடுத்தோம்.

மிகுதியான புண்களால் அவனுடைய கைவிரல்களும் கால்விரல்களும் சேர்ந்து இருந்ததைப் பார்த்து மனது கேட்கவில்லை. அந்தத் துன்பத்தில் இருந்து அவன் மீண்டு குணமடைய வேண்டிக் கொண்டோம்.

அவனை கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் அவனுடைய தாயாரின் முயற்சியால் தற்போது அவன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அவனுக்கு உரிய சிகிச்சைகள் அங்கு நல்லபடியாக நடைபெற்று வருகிறது.

எதிர்பார்த்ததை விட அதிக செலவாகி விட்டதால் கையில் இருந்த காசு காலி ஆகிவிட்டது என்று அவர்கள் நம்மிடம் தெரிவித்து உதவி கேட்டார்கள்.

இந்தத் தகவலை மனிதநேய நண்பர்களாகிய உங்களிடம் பகிர்ந்த போது, பலரும் உதவி செய்தீர்கள்.

நம் கைக்கு பணம் வர வர அந்தத் தொகையை ரூ 3000, ரூ 5000, ரூ 10,000 என்று மூன்று முறை மருத்துவ மனைக்குச் சென்று மொத்தம் பதினெட்டாயிரம் வழங்கியுள்ளோம்.

விருத்தாசலத்தில் இருந்து பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிகுந்த ஓர் அம்மையார் ரூ பத்தாயிரம் அனுப்பி வைத்து அதை அந்த சிறுவனின் தாயாரிடம் வழங்குமாறு கூறியிருந்தார்கள்.
நேற்று நானும் சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடஷும் சென்று அந்தத் தொகையையும் சிறுவனின் தாயாரிடம் வழங்கினோம்.

மனிதநேய நண்பர்களாகிய நீங்கள் வழங்கிய இந்த 28 ஆயிரம் ரூபாய் மிகவும் பயனுடையதாக இருந்ததாக அவனுடைய தாயார் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

இன்னொரு நல்ல தகவல்:
இவ்வளவு நாள் சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் அகத்தியன் குணமடைந்து வருவதை என்னால் பார்க்க முடிந்தது.

எங்கோ இருந்துகொண்டு இந்த சிறுவனின் நலம் பெறுவதற்காக உதவி செய்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.!

“பயன்தூக்கார் *செய்த உதவி நயன் தூக்கின்

* நன்மை கடலின் பெரிது”(திருக்குறள் 103).

பொருள்:
பயனைக் கருதாமல் செய்யப்படும் உதவியின் நன்மையினை ஆராய்ந்தால் அது கடலையும் விட அளவில் பெரியதாகும்.

– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
30.10.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91