போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடலூரைச் சேர்ந்த சிறுவன் அகத்தியன் மருத்துவ செலவுக்கு கடந்த வாரத்தில் ரூ 3000 கொடுத்தோம் அல்லவா?
அவனுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக செலவான தகவலை நண்பர்களிடம் தெரிவித்திருந்தோம்.
மனித நேய நண்பர்கள் பலரும் தங்களால் இயன்ற சிறு சிறு தொகையை அனுப்பி இருந்தனர்.
அவ்வாறு பெறப்பட்ட ரூபாய் 10,000 தொகையை நேற்று அவன் தாயாரிடம் நேரில் வழங்கினோம்.
ஏற்கனவே சென்ற போது, தீபாவளிக்கு உனக்கு என்ன வண்ணத்தில் புத்தாடை வேண்டும் என்று கேட்டிருந்தோம்.
அவன் விருப்பப்படி புத்தாடை எடுத்துச் சென்று அவனிடம் கொடுத்தோம்.
புத்தாடை உடுத்த முடியாத நிலையில் இருந்த போதிலும் அவன் அடைந்த மகிழ்ச்சியை அவனுடைய கண்கள் வெளிப்படுத்தின.

புண்களால், ஒரு கை விரல்கள் ஒட்டி இருந்ததை மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்து விட்டனர். விரைவில் அடுத்த கைக்கும் சிகிச்சை நடைபெற உள்ளது.
நண்பர் மனிதநேயர் கோவிந்தராஜ், மனிதநேயர் ஆடலரசன்(புதுவை) உடன் வந்திருந்தனர்.
அந்தக் குழந்தை விரைவில் பூரண குணமடைய மனிதநேய நண்பர்கள் அனைவர் சார்பிலும் வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.!
அன்பு ஒளி பரவட்டும்.
அகிலம் இன்புற்று வாழட்டும்.!
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 20.10.25.




