புளியந்தோப்பைச் சேர்ந்த ராஜா(44) என்ற சகோதரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு,
வேலைக்குப் போக முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நடை பழக ஒரு ஊன்றுகோலும் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களும் வாங்கி கேட்டார்.
ஒரு மனிதநேய நண்பர் ரூ 2500 அனுப்பி அவருக்கு உதவும்படி கூறினார்.

நானும் நண்பர் கோவிந்தராஜும் விரைந்து சென்று, அவருக்கு ஏற்ற ஊன்று கோலும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வாங்கி கொடுத்தோம்.
இந்த நற்செயலில் ஈடுபட்ட மனிதநேயருக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள் பாராட்டுகள்.!
” செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”(திருக்குறள் 101)
பொருள்:
பிரதிபலன் கருதாது ஒருவர் செய்யும் உதவிக்கு விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுப்பினும் ஈடாகாது.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 24.10.25




