சாலையோர ஏழை எளிய மக்கள் 60 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.!
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி நம்முடைய உதவும் கைகள் குழு தொடங்கப்பட்ட போது, இதில் அங்கம் வகித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர் மூத்த பத்திரிகையாளர் டி. கே. ரவீந்திரன். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில் கொரோனாவுக்கு அவரே பலியானார்.
அவருடைய மறைவால் சகோதரி திருமதி. பிரேமா இரவீந்திரன் மற்றும் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், உதவும் கைகளில் அங்கம் வகித்து தம் கணவர் செய்தது போல ஏழை எளிய மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இன்று இரவீந்திரன் அவர்களின் 4-வது ஆண்டு நினைவை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும்படி சொல்லி ரூபாய் ஆறாயிரம் அனுப்பி வைத்தார்.

அதன்படி , சாலையோர ஏழை ,எளிய மக்கள் 60 பேருக்கு அறுசுவை உணவு வழங்கி, அவரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினோம்.
மூத்த பத்திரிக்கையாளரான டி.கே. இரவீந்திரன் மாலை முரசு குழுமத்தில் பணியாற்றியவர்.
தன்னுடைய சிறப்பான கட்டுரைகள் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க காரணமாக இருந்தார்.
அவர் வரலாற்று ஆய்வாளரும் ஆவார்.
சங்க காலத்துக்கு பிறகு தமிழகத்தை 3 நூற்றாண்டு காலம் ஆண்ட களப்பிரர்கள் குறித்து ஆய்வு செய்து நூல் எழுதியுள்ளார். முகலாயர் வரலாற்றையும் ஆராய்ந்து ஆய்வு நூல் சமர்ப்பித்தார். பல வரலாற்றுப் புதினங்களையும் படைத்து தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்துள்ளார்.
மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் டி. கே. ரவிந்திரன் அவர்களை நினைவு கூர்ந்து நம்முடைய உதவும் கைகளை சார்பில் புகழ் அஞ்சலி செலுத்துகிறோம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”.(திருக்குறள் 50)
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
14.06.25.




