மாற்றுத்திறனாளிகள் சிரமம் நீங்க உரிய நடவடிக்கை எடுங்கள்! முதலமைச்சர் விஜய்சாருக்கு வேண்டுகோள்

புரசை உதவும் கைகள்
என்ற அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். முதுகுத்தண்டு பகுதியில் காயமடைந்து மாதக் கணக்கில் படுக்கையில் இருக்கும்
சகோதர சகோதரிகளுக்கும் தமிழக முழுவதும் பயணித்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறோம்.
மனிதநேய நண்பர்கள் பலர் உதவியுடன் இதைச் செய்கிறோம்.

தொடர்ந்து மாற்று திறனாளி குடும்பங்களுடன் நாங்கள் பயணிக்கும் அனுபவத்தின் அடிப்படையில்,
தமிழக முதலமைச்சர் ஆகிய உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சட்டத்தில்
பல சலுகைகள் உள்ள போதிலும், அவற்றின் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை.

பட்டம் பெற்ற பல மாற்றுத்திறனாளி சகோதர- சகோதரிகளுக்கு உரிய வேலை கிடைப்ப தில்லை. அவர்கள் தொடர்ந்து ரயில்களிலும் சாலை ஓரங்களிடம் சிறு சிறு பொருட்களை விற்பனை செய்து
தங்கள் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகருக்கு சென்றிருந்தேன். அங்கு ஏராளமான மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளன.
அங்கு அவர்கள் ஒரு சங்கம் அமைத்து, தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு அங்கு தினமும் ரூபாய் 100 வருமானம் ஈட்டும் வகையில் வேலை செய்கிறார்கள். அந்த சங்க நிர்வாகிகள் முயற்சியால் இப்பணி நடக்கிறது.

இப்படி ஒரு வேலை வாய்ப்பை மற்ற இடங்களிலும் தாங்கள் ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும்.

அவர்கள் நல்லனுக்காக மட்டும் சிந்திக்கும் வகையில்
மனிதநேயமிக்க ஒரு அமைச்சரை நியமித்து, மாற்றுத்திறனாளிகளுள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி.
அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.

அரசாங்கம் வழங்கும் உதவிப் பணம் அவர்களுக்கு உதவியாக உள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது வேலை வாய்ப்ப தான். உழைத்து அதில் கிடைக்கும் வருமானம் தான் பெரு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்

எங்களைப் போன்ற அறக்கட்டளைகளால்
பரந்துபட்ட உதவிகளை வழங்க முடியாது.
அதை அரசாங்கத்தால் செய்ய முடியும், உங்களிடம் இருந்து அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்,
அவர்களுடைய கண்ணீரை துடைத்து,
ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கும்
வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
-புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
22.05.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91