முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு படுக்கைகள் வாங்கிக் கொடுங்கள் நண்பர்களே!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் முதியோர் இல்லத்திற்கு நம்மால் முடிந்த உதவிகளை, மனிதநேய நண்பர்களாகிய உங்கள் துணையோடு அடிக்கடி செய்து வருகிறோம்.

அங்குள்ள 15 வயதானவர்கள்
படுக்கை வசதி இல்லாமல் இரவு நேரத்தில் சிரமப்படுவதாக நமக்கு தெரிவித்தார்கள்.

ஒரு படுக்கையின் விலை என்ன என்று விசாரித்த போது ரூபாய் 4,000 என்று கூறினார்கள்.

அங்குள்ள முதியோர்கள் பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்கள்,
வேளா வேளைக்கு உணவு கொடுத்து நன்கு கவனித்துக் கொள்கிறார்கள், அந்த இல்லத்தில் தூய்மை பேணப்படுகிறது, எனவேதான் நாம் உதவி வருகிறோம்.

அவர்கள் கேட்ட உதவியை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மனிதநேய நண்பர்களே நீங்கள் ஆளுக்கு ஒரு படுக்கை வாங்கி கொடுத்தால் கூட அவர்கள் கோரிக்கை நிறைவேறி விடும்.
உதவிக்கரம் நீட்டும்படி உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.!
.‌. – புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
01.04.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91