என் வாழ்க்கையில், மனதிற்கு கஷ்டத்தைத் தரும் நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. சைதாப்பேட்டையில் உள்ள அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் போய்விட்டு வந்த பிறகு
என் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
அவனுக்கு 30 வயது. ஆனால் குழந்தை. உடல் பருமன் அதிகம்.அவனால் ஒரு அடி எடுத்து வைக்கவே பெற்றோர்களின் உதவி தேவை.
பல தடவை கீழே விழுந்ததால் இரண்டு கால்களும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆங்காங்கு பிளேட் வைக்கப்பட்டுள்ளது. அப்பா தன் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் இவன் கூடவே இருக்கிறார். தாயாரும் பக்க பலமாக உள்ளார்.
அதிகாலை இவன் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இருவரும் உடன் இருந்து கவனித்துக் கொள்கிறார்கள். இதனால் குடும்பத்திற்கு வருமானம் இல்லை.
இந்தத் தந்தை தன் குடும்ப சூழலை எடுத்து சொல்லி நம்மிடம் உதவி கேட்டார். ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் வாங்கித் தருவதாக சொல்லியிருந்தோம்.

இதற்காக மனித நேயம் மிகுந்த அம்மையார் நிர்மலா மலர் (மலேசியா) ரூபாய் 1899 அனுப்பி வைத்தார். பெயர் குறிப்பிட விரும்பாத மேலும் சில மனிதநேயர்கள் தங்களால் இயன்ற தொகையை அனுப்பி வைத்தனர். இந்த வகையில் மொத்தம் ரூபாய் 5000 சேர்ந்தது.
இந்தத் தொகையை வைத்து நல்ல தரமான அரிசி மூட்டை மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ், உடன் வந்து உதவினார்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இந்த குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள் அனைவருக்கும் நன்றி.
” அற்றார் அழிபசி தீர்த்தல் அக்ஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.”(திருக்குறள் 226).
பொருள்:
வறியவரின் பசியைப் போக்க வேண்டும்.அதுவே பொருள் வைத்திருப்பவர் தன் பொருளை சேமித்து
வைப்பதற்கு உரிய இடமாகும் .
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 01.11.25




