வணக்கம்,
சென்னையில் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கண்ணகி நகரும் ஒன்று. இங்கு மாற்றுத்திறனாளி சகோதர- சகோதரிகளின் குடும்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவர்கள் வானம் வசப்படும் என்ற பெயரில் ஒரு சங்கம் அமைத்து கூட்டுறவாக இயங்குகின்றனர்.
இவர்களுக்காக ஒரு சமூகக் கூடம் அங்கு உள்ளது. அங்கு கைத்தொழில் கற்றுக் கொடுக்கப்பட்டு சுயமாக சம்பாதிக்கும் வகையில் செயல்பாடுகள் நடக்கின்றன. நான் அண்மையில் நேரில் சென்று அதை எல்லாம் பார்த்து மகிழ்ந்தேன்.

அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி சகோதரிகள் நம்மிடம்,
பள்ளி செல்லும் தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி கேட்டனர்.
நல்ல ஸ்கூல் பேக் இல்லாமல் பிள்ளைகள் சிரமப்படுவதாகவும்
100 பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் தேவைப்படுவதாகவும் கோரிக்கை வைத்தனர்.
மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு எதிர்காலமே அவர்களுடைய பிள்ளைகள் தான்.
புத்தகம் மற்றும் நோட்டுகள் உள்ளிட்ட கல்விப் பொருட்களை பாதுகாப்பதில் ஸ்கூல் பேக் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே இந்த சகோதர சகோதரிகளின் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் வாங்கி கொடுக்குமாறு மனிதநேய நண்பர்களாகிய
உங்களை வேண்டுகிறேன்.
ஆளுக்கு ஒரு ஸ்கூல் பேக் வாங்கி கொடுங்கள், ஓரிரு நாளில் அவர்கள் கோரிக்கை நிறைவேறிவிடும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
21.06.26




