முதியவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்திய விளையாட்டு.!

சென்னை, ஓட்டேரியில்
உள்ள பாதுகாப்பு இல்லத்தில் 20 வயது முதல் வயது முதிர்ந்த இரு பாலர் 55 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள்.
மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பவர்கள். சமூக ஆர்வலர்களால் காவல் துறை அனுமதி பெற்று இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள்.
அரசு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த பாதுகாப்பு மையத்தை நடத்துகிறார்கள்.

இந்த மையத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
அவ்வப்போது இவர்களுக்கு பிடித்த அறுசுவை உணவை வழங்குகிறோம். புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தோம்.
மனித நேயர்கள் தங்கள் பிறந்த நாள் அல்லது வீட்டில் நடைபெறும் நல்ல நிகழ்ச்சிகளின் போது
நம்முடன் உதவும் முன் வருவார்கள். அப்போது இந்த இல்லத்திற்கு என்ன தேவைப்படுகிறது அதை நாம் வாங்கி கொடுப்போம்.
இங்கு இருப்போர் ஒரே இடத்தில் இருக்கிற காரணத்தாலும் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டிய இருப்பதாலும்
மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக தென்பட்டனர்.
எனவே, இவர்களை மகிழ்வித்து மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்க விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுக்க முடிவு செய்தோம்.

எந்தெந்த விளையாட்டுகளை அங்கு விளையாட வைக்க முடியும்
என்று கணக்கெடுத்து,
செஸ் போர்டுகள் கேரம்போர்டுகள், பூ பந்து விளையாடுவதற்கு தேவைப்படும் மட்டைகள் வலை,
எடை குறைந்த பெரிய பந்துகள், கேச் பிடித்து விளையாடும் வளையங்கள், கிரிக்கெட் விளையாட்டு மட்டைகள்,ஸ்டெம்ப் மற்றும் பந்துகள் உள்ளிட்ட விளையாட்டுப்பொருட்களை அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப
வாங்கி கொடுத்தோம்.

இவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள் என்று தெரிவித்தவுடன்
மனிதநேயர் வில்லியம்ஸ் (லால்குடி, திருச்சி)
ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள விளையாட்டு சாதனைகளை உடனே அனுப்பி வைத்தார்.

மனிதநேயர் ஸ்ரீராம் சார் (உதவும் கைகள்)
ரூபாய் 10 ஆயிரம் மணிக்கு அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் வாங்கிக் கொடுங்கள் என்றார். கடந்த ஆறு வருடங்களாக ஸ்ரீராம் சார் செய்து வரும் உதவிகளை தொகுத்தால் ஒரு புத்தகமே வெளியிடலாம். உதவி பெறும் ஒருவருடைய முகத்தையும் அவர் பார்த்தது கிடையாது.
அந்த அளவுக்கு இந்த சமூகத்திற்கு செய்துள்ளார்.

நண்பர் கோவிந்தராஜ் சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ் விளையாட்டுப் பொருட்களுடன் அங்கு போய் இறங்கினோம்.

அந்த மையத்தில் இருந்த அனைவரும் ஆளுக்கு ஒரு விளையாட்டில் இறங்கி விட்டனர்.
இதுவரை பல முறை அங்கு சென்று உள்ளேன். முதன்முறையாக அனைவருடைய முகத்திலும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கண்டேன்.
விளையாட்டுக்கு
எவ்வளவு பெரிய சக்தி உண்டு என்பதை நேரில் பார்த்தேன்.

இந்த இல்லத்துக்கு விளையாட்டுப் பொருட்களை வழங்க போவதைக் கேள்விப்பட்டு,
விளையாட்டு வீராங்கனைகள்
சசிகலா ( சிலம்பம்) கலை (வாள்வீச்சு)
உடன் வந்திருந்தனர்.
இவர்கள் இருவரும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற்று வரும் மாணவிகள் ஆவர்.
தங்களுடைய
சிலம்பம் ,வாள் வீச்சுக் கலையை அங்கு நிகழ்த்திக் காட்டி அனைவரையும் மகிழ்வித்தனர்.

நம் முன்னோர்கள் விளையாட்டை
தங்களுடைய தினசரி நிகழ்ச்சிகளில் ஒன்றாக வைத்திருந்துள்ளார்கள். அது ஒரு மிகச்சிறந்த நோய் தடுப்பு மருந்தாக இருந்து உள்ளது.

நம் உறவுகள்- நண்பர்கள் ஒன்று கூடும் போது அதில் விளையாட்டும் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.!

அன்றறிவாம் என்னாது
அறம்செய்க மற்றது

பொன்றும்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36)

பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல்
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அறம் செய்து வாருங்கள். அதுதான் ஒருவருக்கு வயதாகி
உடல் நலம் குன்றும் போது துணையாக வந்து நிற்கும்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
22.06.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91