சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிறுமியின் காலை சீராக்கும் நவீன சிகிச்சையின் போது ஸ்கேன் எடுக்க உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக நம்மிடம் உதவி கேட்டார்.
மனிதநேயர் செந்தில்குமார் (திருநெல்வேலி) ரூபாய் 2500,
தாய்ப் பாசம் அறக்கட்டளை, ரூபாய் ஆயிரம்,
அனுப்பி வைத்தனர்.
இப்படி சேர்ந்த ரூபாய் 3500 தொகையை அந்த சிறுமியின் தாயாரிடம் வழங்கினோம்.

இளங்கலை பட்டம் முடித்து புரசைவாக்கத்தில் வசித்து வரும் மாணவிக்கு தந்தை கிடையாது. எம்பிஏ படிப்புக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். அவருடைய கல்லூரி கட்டணத்துக்கு ரூபாய் 3800 தேவைப்பட்டது.
மனிதநேயர் நீலேஷ் (திருவள்ளூர்) இந்தத் தொகையை உடனே அனுப்பி வைத்தார். கல்லூரியில் அந்த தொகையை செலுத்தினோம்.
இந்த மகத்தான சேவைகளில் ஈடுபட்ட மனித நேயர்கள் அனைவருக்கும் நம்முடைய உதவும் கைகள் சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
“காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”(திருக்குறள் 102)
பொருள்; உரிய காலத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிது ஆக இருக்கலாம், ஆனால் அதன் தன்மையை ஆராயும்பட்சத்தில் அது கடலையும் விட பெரிதாகும்.
– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
. 15.11.25




