மனநல காப்பகத்திற்கு சென்று 180 பேருக்கு அன்னதானம் வழங்கினோம்.!

திருவள்ளூரைச் சேர்ந்த கருணை உள்ளம் கொண்ட மேடம் நம்மைத் தொடர்பு கொண்டு, ஆவடியில் உள்ள மனநல காப்பகத்தில் 180 பேர் உள்ளனர். அவர்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கும்படி கூறி அதற்கான தொகையை அனுப்பி வைத்தார்.

அந்த மனநல காப்பகத்திற்கு இன்று மதியம் சென்று அங்கு தங்கியிருக்கும் 180 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினோம்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலையோரம் அலைந்து திரிபவர்களை காவல்துறையின் அனுமதி பெற்று இங்கு அழைத்து வந்து பராமரிக்கின்றனர்.

நல்ல தரமான உணவு கொடுத்து நன்கு கவனித்துக் கொள்கின்றனர். தெய்வீக பணியை செய்யும் அந்த நிர்வாகிகளை மனமார வாழ்த்தினோம். நண்பர் மனித நேயர் கோவிந்தராஜ், தாய்ப் பாசம் அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி மேடம் உடன் வந்திருந்தனர்.

நம் சமூகத்தில் எவ்வளவு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.!
தங்கள் பெயர் தெரியாமல் இருப்பிடம் சொல்லாமல் உரியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்கள். இவர்களை எப்படி பாராட்டுவது? எப்படி வாழ்த்துவது?

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி(திருக்குறள் 226)

பொருள்:
இல்லாதவர்களின் வயிற்றுப் பசியை போக்க வேண்டும், அதுதான் பொருள் வைத்திருப்பவர் தங்கள் பொருளை சேமித்து வைக்கும் இடமாகும்.

‌‌. – புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
‌. 05.12.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91