அண்மையில் வடலூரைச் சேர்ந்த அகத்தியன் என்ற சிறுவனுக்கு நாம் உதவி செய்தோம் அல்லவா.!
உடல் முழுக்க புண்களாகி ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு உங்கள் உதவியால் காற்று படுக்கை, மின்விசிறி, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்தோம்.
புண்கள் அதிகமாக இருந்ததால் கைவிரல்கள் அனைத்தும் ஒட்டிக்கொண்டு, அவன் மிகவும் அவதிப்பட்டு வந்தான்.
தற்போது அவனை சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து வந்து
சேர்த்து உள்ளனர்.

ஒட்டிக் கொண்டிருக்கும் கை விரல்களை பிரித்து சீர் செய்யும் அறுவை சிகிச்சை நாளை அவனுக்கு நடைபெற உள்ளது. அந்த மருத்துவ மனை நிர்வாகம் இரக்கம் காட்டியுள்ளது.
அருகில் இருந்து கவனிக்கும் அவனுடைய தாயார் கை செலவுக்குப் பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்.
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் மனிதநேய நண்பர்களே.!
நாம் கொடுக்கும் ஒரு சிறிய தொகை கூட இப்போது அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.!
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 14.10.25




