இந்த 13 வயது சிறுமி தற்போது சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறாள்.
இவளுக்கு வெகு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த குழந்தைக்கு என்ன பிரச்சினை என்றால், ஒரு வகை சத்துக் குறைபாடால் இரண்டு கால்களும் நாளுக்கு நாள் வளைந்து கொண்டே போயின.
இதைப் பார்த்து மிகவும் கவலைப்பட்ட தாயார், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துவிட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தார்.

மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்துவிட்டு, மற்ற சிறுமிகளை போல இவள் எதிர்காலத்தில் இயல்பாக செயல்பட வேண்டுமானால், இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து, எலும்புகளுக்கு பக்க பலமாக கம்பிகளை இணைக்க வேண்டும், இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் நாளடைவில் இந்த சிறுமி நடக்க முடியாத நிலையை அடைவாள் என்று தெரிவித்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
உள்ளே பொருத்தும் கம்பிகளை வாங்குவதற்கும் அறுவை சிகிச்சைக்கு முன்பாகவும் பின்பாகவும் ஸ்கேன் எடுப்பதற்கும் சுமார் ரூ10,000 முதல் 15 ஆயிரம் வரை செலவாகும் என்று தெரிகிறது.
இதற்காக நம்முடைய உதவிய நாடினார். மனிதநேய நண்பர்களாகிய நீங்கள் உதவிக்கரம் நீட்டி இந்த சிறுமி நல்லதொரு எதிர்காலம் பெற்றிட உதவிட வேண்டுகிறேன்!
- புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
02.11.25




