தொழு நோயால் பாதிக்கப்பட்ட 60 சகோதர சகோதரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் மளிகை* பொருட்கள் வழங்கினோம்!

திருச்சி தொட்டியத்தில்
தொழு நோயால் பாதிக்கப்பட்ட சகோதர- சகோதரிகள் வசிக்கிறார்கள்.

இவர்களுடைய உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால்
எங்கும் போய் வருவாய் ஈட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு உதவுவது சமூகக் கடமை என்பதால் நம்மாலான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இங்குள்ள 30 பெண்களும் 30 ஆண்களும் அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு புத்தாடைகளும் மளிகைப் பொருட்களும் கேட்டார்கள்.

அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைக்குமாறு மனித நேய நண்பர்களை
கேட்டிருந்தோம்.

மனித நேயர் வில்லியம்ஸ்(லால் குடி,திருச்சி) அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத்தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

ஆண் சகோதரர்கள் 30
பேருக்கு லுங்கி,சட்டை மற்றும் டவல்
ஆகிய புத்தாடைகளும்
பெண் சகோதரிகள்
30 பேருக்கு புடவையும் வாங்கித் தயாராக வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அவருடைய வசிப்பிடம் திருச்சி என்பதால் அவரையே
நேரில் சென்று வழங்கிடக் கேட்டுக் கொண்டோம்.

நம் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தொட்டியத்துக்கு நேரில் சென்று 60 பேருக்கும் அவரே புத்தாடைகளையும் 15 நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வழங்கினார்.

இதோடு, வடை பாயாசத்துடன் அறுசுவை உணவும் வழங்கி அனைவரையும்
மகிழ்வித்தார்.

உதவி பெற்ற அனைவரும் மனித நேயர் வில்லியம்ஸ் அவர்களை நெஞ்சார வாழ்த்தி தங்கள் நன்றியைத் தெரித்தனர்.
உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நாமும் அவரை வாழ்த்துவோம்.


அன்றறிவாம் என்னாது அறம் செய்த மற்றுஅது

பொன்றும்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36)

பொருள்: பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும்.அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
18.07.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91