சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா நான் தான் கல்யாணி💐 நீங்க நிறைய பேருக்கு உதவி செய்திருப்பீர்கள் அதில் நான் யார் என்று உங்களுக்கு தெரியுமோ என்று எனக்கு தெரியவில்லை😔 இருந்தாலும் இந்த நேரத்தில் நான் ஞாபகப் பண்ண விரும்புகிறேன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் புவனேஸ்வரி நாங்கள் இருவரும் ரொம்ப கஷ்டத்தில் வாழ்ந்திருந்தோம் என்னால் காலேஜ் கூட படிக்க வைக்க முடியாத என் நிலை இருந்தது ஏனென்றால் அவளுடைய தந்தை எங்களுடன் இல்லை 17 ஆண்டுகள் ஆகிறது எங்களை விட்டு சென்று இரண்டு பெண் பிள்ளைகளும் நானும் தனியாக நின்று விட்டோம்… இரண்டு குழந்தைகளையும் பத்து ஆண்டுகளாக தனியாக வளர்த்து வந்தேன் இந்த இடைவெளியில் சின்ன மகள் உமா மகேஸ்வரி இறந்து விட்டாள் அதையும் கடந்து நான் பெரிய மகளுக்காக புவனேஸ்வரி காலேஜ் படிக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க வைக்க முடிந்தது காலேஜ்க்கு எல்லாம் அனுப்ப முடியவில்லை ஏனென்றால் வருமானம் இல்லை நான் செய்வது டெய்லர் வேலை தான்… ஆகையால் என் மகளை நான் ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன் அப்பொழுது உங்களுடைய அழைப்பு வந்தது என்னிடம் கேட்டீர்கள் உங்கள் மகளுக்கு என்ன வேண்டும் என்று காலேஜ் படிக்க வேண்டும் என்று நான் சொல்ல நீங்கள் உடனடியாக அதற்கு உதவி செய்தீர்கள் அல்லவா அந்த உதவிதான் இந்த அளவிற்கு எங்களை எடுத்து வந்து நிறுத்தி இருக்கு இங்கு பாருங்கள் என் மகள் திருமணம் நடந்து 3 நாட்களாக ஆகிறது…

👆 இதெல்லாம் நாம் செய்வனா என்று நினைத்தேன் நல்ல மாப்பிள்ளை எங்களுக்கு கிடைத்துள்ளார் நகையெல்லாம் ஒன்றும் தேவையில்லை மகளை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பி கேட்டார் நானும் அதற்கு சரி என்று சொல்லி இன்று மன மேடையில் மணமக்களாக நிற்கிறார்கள் இவர்களை நீங்கள் வாழ்த்த வேண்டும் 28 6 2026 ஞாயிற்றுக்கிழமை மாலை வரவேற்பு நிகழ்ச்சி இருப்பதினால் நீங்கள் நேரில் வந்து குழந்தையை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் வந்து ஆசீர்வாதம் செய்தால் எனக்கும் என் மகளுக்கும் பேரின்பமாக இருக்கும் பத்திரிக்கையில் விலாசம் இருக்கிறது நேரில் கட்டாயம் வரவும் இதுவரை உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை இந்த போன் மூலமாக உங்களுக்கு தகவல் கொடுப்பதில் நான் மனம் வருந்துகிறேன் என்னை மன்னியுங்கள் பிள்ளையை நேரடியாக வந்து உங்க கையால் வாழ்த்துங்கள் சார் ப்ளீஸ் இப்படிக்கு கல்யாணி உமா💐🙏



