சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருடைய தந்தையார் கடந்த ஆண்டு திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
வருவாய் ஈட்டிப் கொடுத்து வந்த தந்தை காலமானதால்
கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் இந்த மாணவி திணறினார்.
கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுக்கு முன்னதாக,அவருடைய தாயார்
நம்மிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்டார். அப்போது அந்தக் கட்டணத்தை நாம் செலுத்தினோம்.
இந்த ஆண்டு இறுதி ஆண்டு ஆகும்.
அந்த மாணவியின் தாயார் நம்மை அணுகி,
“எங்களுடைய சேமிப்புக் கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் உள்ளது,
பாக்கி கட்டணத்துக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்,
இந்த ஆண்டுக்குப் பிறகு அவள் வேலைக்குச் சென்று
குடும்பத்தைக் கவனத்துக் கொள்வாள்,
உதவிக்கரம் நீட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அந்தக் கல்லூரி நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து, இந்த
குடும்பத்தின் நிலையை எடுத்துச் சொன்னோம்,
அவர்கள் கல்லூரியில் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை சுட்டிக்காட்டினார்கள்,
இவர்களால் கண்டிப்பாக அந்த கட்டணத்தை செலுத்த இயலாது.
” மனிதநேய நண்பர்களிடம் உதவி பெற்று
ரூபாய் 25 ஆயிரம் நாங்கள் செலுத்துகிறோம்,
இந்த மாணவி படிப்பை முடிக்க உதவுங்கள்”என்று கேட்டோம்.
நம் கோரிக்கையை கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த மாணவி குறித்த தகவலை மனிதநேய
நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
மனிதநேயர் கிஷோர்(வண்ணாரப்பேட்டை) அந்தக் கல்லூரி பெயரில் ரூபாய் 20 ஆயிரத்திற்கான காசோலை கொடுத்தார்.
மனிதநேயர் சண்முகசுந்தரம் (ஈரோடு) ரூபாய் ஐந்தாயிரம் வழங்கினார்.
அந்தக் கல்லூரிக்கு சென்று மொத்தம் 50 ஆயிரத்தையும் செலுத்தினோம்.
மாணவிக்கு இரக்கம் காட்டி உதவியமைக்கு கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம்.
மனித நேயர்கள் கிஷோர் மற்றும் சண்முகசுந்தரம் இருவருக்கும் அந்த மாணவியும் அவருடைய தாயாரும் தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்டி
ஒரு குடும்பத்திற்கு ஒளி கொடுத்த மனித நேயர்கள் இருவருக்கும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் நன்றிகள்.!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”.(திருக்குறள் 102)
பொருள்:
உரிய நேரத்தில் செய்யப்படும் உதவியின் அளவு
எத்தகையது என்றால்
இந்த உலகை விடவும் பெரிது ஆகும்.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்,
– 9840914739
– 25.06.26



