சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார் இந்தக் கல்லூரி மாணவி. முதல் ஆண்டை முடித்து இரண்டாம் ஆண்டு செல்கிறார்.
இந்த மாணவியின் தந்தையார் 8 மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். தாயார் வீட்டு வேலை செய்பவர்.
தந்தையார் இருக்கும் வரை குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தனியார் கல்லூரியில் படித்து வருவதால் இரண்டாம் ஆண்டு கட்டவேண்டிய ரூபாய் ஐம்பதாயிரம் தொகையை கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

தங்களிடம் ரூபாய் 25 ஆயிரம் இருப்பதாக சொல்லி உதவி கேட்டார்கள்.
அவர்களுடைய வேண்டுகோளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்,
உதவிக்கரம் நீட்டுங்கள் மனிதநேய நண்பர்களே!
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
20.05.26



