மனிதநேயர் மனோஜ் குமார் (மஸ்கட்) அவர்களின் 56வது பிறந்த நாள் இன்று.
இந்நாளையொட்டி,
மனநல காப்பகத்தில் இருப்பவருக்கு அறுசுவை உணவு வழங்குமாறு சொல்லி அதற்குரிய தொகையை அனுப்பி வைத்தார்.
பட்டாபிராமில் உள்ள
மனநலக் காப்பகத்தில் இரு பாலரும் உள்ளனர்.
அங்குள்ள 65 பேருக்கு
இந்த மதியம் அறுசுவை உணவு வழங்கினோம்.
மனிதநேயர் மனோஜ் குமார் அவர்களை வாழ்த்தி அங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நம்முடன் அருமை நண்பர் மனிதநேயர் கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
மனிதநேயர் மனோஜ் குமாருக்கு நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.!
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.(திருக்குறள் 226)
பொருள்:
வறியவரின் பசி போக்க வேண்டும்.அதுவே, பொருள்பெற்றவர் தனக்கு பின்னாளில் சேர்த்து வைக்கும் இடம் ஆகும்.

– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739,
19.05.26




