எழுத்தாளர் சிவசங்கரியின் “அறம் செய விரும்பு” வாயிலாக கண்ணகி நகரில் ஏழைப் பெண்மணிக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தோம்.!

சென்னை மாநகரில்
ஏழை ,எளிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் பகுதி துரைப்பாக்கத்தில் உள்ள கண்ணகி நகர் ஆகும்.

இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி மக்களும் வாழ்கிறார்கள். வானம் வசப்படும் என்ற பெயரில் இவர்கள்
அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பின் நிர்வாகிகள் திரு.முருகன், திரு. பாலமுருகன்
இருவரும் நம்மிடம் தொடர்பு கொண்டு, அப்பகுதியில் உணவு வியாபாரம் செய்யும் ஒரு பெண் குறித்து பேசினார்கள்.

கடின உழைப்பாளியான இந்தப் பெண்ணுக்கு வாய் பேசாத -காது கேட்காத குழந்தை உள்ளது. இந்தப் பெண் தன் வீட்டு வாசலில் உணவுக் கடை அமைத்து சுவையான உணவு வகைகளை தயாரித்து , நியாயமான விலையில் விற்பனை செய்து வருவதாக கூறினார்கள்.
மழைக்காலத்திலும் வெயில் காலத்திலும் மிகவும் சிரமப்படுவதாகவும்
ஒரு தள்ளுவண்டி இருந்தால் அந்த குடும்பம் மிகவும் பயன்பெறும், உதவிக்கரம் நீட்டுங்கள் ” என்று கேட்டுக் கொண்டார்கள்.

அப்பகுதிக்கு ஏற்கனவே நாம் பலமுறை சென்று உதவிகள் செய்துவரும் பழக்கம் இருப்பதால்,
அந்த இளம் பெண்ணின் திறமை மற்றும் கடின உழைப்பு குறித்து மேலும் விசாரித்து உறுதி செய்தோம்.

தகுதி படைத்த பெண்களுக்கு இது போன்ற, வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் உதவிகளை
ஏற்கனவே பிரபல எழுத்தாளர் சிவசங்கரி செய்துள்ளார். அவருடைய நண்பரும் சிறந்த பத்திரிகையாளருமான திரு.உதய் ராம் (ஆசிரியர்:உரத்த சிந்தனை) நம் செயல்கள்பற்றி நன்கு அறிந்தவர்.

இந்தப் பெண்மணி குறித்து திரு.உதய ராம் அவர்களிடம் சொன்னதும்,
அவர் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

நாம் பார்த்து வியந்த பேராளுமைகளுள்
எழுத்தாளர் சிவசங்கரியும் ஒருவர்.
பெண்கள் மட்டும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் எழுதியதோடு
களத்தில் நின்றும் நேரடியாகவும் உதவி செய்து வருபவர்.
இதற்காகவே அறம் செய்ய விரும்பு என்ற அமைப்பை நிறுவி, நண்பர்கள் உதய்ராம், சினிமா இயக்குநர் ராசி. அழகப்பன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

உதவி கேட்டவர் தகுதி படைத்த பெண் என்பதால் உடனடியாக ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலையை
சிவசங்கரி வழங்கினார்.

உணவு வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு மிக உறுதியான- தரமான பலகைகள் மூலம் தள்ளுவண்டி அமைத்துக் கொடுங்கள் என்று சொல்லி தன் பங்குக்கு மனித நேயம் மிகுந்த ஒரு சிவபக்தர் (தஞ்சாவூர் ) ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பியிருந்தார் .
மனிதநேயர் பாலன் (ஓசூர்) 2000 அனுப்பி வைத்திருந்தார்.

இந்தத் தொகையைக் கொண்டு தரமான பலகைகள் மூலம் ஒரு தள்ளு வண்டி தயார் செய்தோம்.

இந்தத் தள்ளு வண்டியுடன் கண்ணகி நகர் சென்றோம். அருமை நண்பர் மனித நேயர் கோவிந்தராஜ், சமூக ஆர்வலர் புதுப்பேட்டை வெங்கடேஷ் உடன் வந்திருந்தனர்.

மனித நேய பத்திரிக்கையாளர் உதய் ராம் வருகை தந்திருந்தார்.
இந்தக் கடையை திறந்து வைப்பதற்காக சினிமா இயக்குநர் ராசி.அழகப்பன் வருகை புரிந்திருந்தார்.

அங்கு திரண்டு இருந்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் முன்னிலையில்,
அந்த சிற்றுண்டி கடையின் செயல்பாட்டை
மனிதநேய இயக்குநர் ராசி. அழகப்பன் தொடங்கி வைத்தார்.

அந்தப் பகுதியில் சிறிது நேரம் இருந்து, அந்த மக்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
“நீங்கள் செய்தது உருப்படியான காரியம்,
அப்பெண்மணியின்
குழந்தையின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்கு இந்த கடை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லி அப்பகுதி மக்கள் வாழ்த்தினார்.

இந்த வாழ்த்துக்கு
உரித்தானவர்களான மனித நேயர்கள் எழுத்தாளர் சிவசங்கரி, சிவனடியார் மற்றும் பாலன் உள்பட அனைவருக்கும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள், பாராட்டுகள்.!

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி

அகத்தானாம் இன் சொலினதே அறம்(திருக்குறள் 93)
பொருள்:
முகமலர்ச்சியுடன் இனிதாக அன்புடன் வரவேற்று அக மகிழ்ச்சியுடன் இனிய சொல்லை பேசுவது அறம், என்கிறார் வள்ளுவர்.

எழுத்தாளர் சிவசங்கரியின்
அறம் செய விரும்பு
மேலும் பல குடும்பங்களை வாழ வைக்கட்டும்.!🙏🙏🙏

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்,
9840914739
18.05.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91