கடலூர் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
அண்மையில் நம்மை தொடர்பு கொண்டு மளிகை பொருட்களும் ஊன்று கோல்களும் கேட்டார்கள்.
இந்த நோயால் பாதிக்கப்படும் கணிசமானோர் மாற்றுத்திறனாளிகள் ஆகிவிடுவதோடு வேலை வாய்ப்புக்கும் செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இது போன்றோரை ஆதரிக்க வேண்டியது
நம் சமூகக் கடமை ஆகும்.
இவர்களுக்கு மனித நேய நண்பர்கள்
உடனடியாக உதவிக்கரம் நீட்டினர்.
அவர்கள் கேட்ட உதவிகளை நாம் செய்தோம்.
உதவிக்கரம் நீட்டிய மனித நேயர்கள் வருமாறு:
மனிதநேயர் திருமதி சுலோச்சனா (ஊத்தங்கரை )15 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கினார்.
மனித நேயர் ஸ்ரீராம் சார் (உதவும் கைகள்)
10 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கினார்.
மனிதநேயர் (பெயர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்)
ஐந்து குடும்பங்களுக்கு வழியைப் பெருக்கல் வழங்கினார்.
ரூ 500 ,1000, 2000 என்று மனித நேயர்கள் பணம் அனுப்பி வைத்திருந்தனர். இந்த வகையில் சேர்ந்த பணத்திலிருந்து பத்து குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கினார்.
மனிதநேயர் சீனிவாசன் ( மஸ்கட்) ஒரு கையால் ஊன்றி நடக்கும் ஊன்றுகோல் 4 பேருக்கும்
இரண்டு பக்கமும் பயன்படுத்தும் ஊன்று போல் இரண்டு பேருக்கும் வழங்கினார்.
கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் ஒரு கையால் பயன்படுத்தும் ஊன்று கோல் ஒருவருக்கும் இரண்டு கையால் பயன்படுத்தும் ஊன்று கோல் ஒருவருக்கும் வழங்கினார்.
மனிதநேயர் லட்சுமி நாராயணன் (பாண்டிச்சேரி) ஒரு பக்கம் பயன்படுத்தும் ஊன்று போல் 4 பேருக்கு வாங்கி கொடுத்தார்.
மனித நேயர் எத்திராஜ் (கோயம்புத்தூர்) இரண்டு பக்கமும் பயன்படுத்தும் ஊன்று கோல் இரண்டு பேருக்கும் ஒரு பக்கம் பயன்படுத்தும் ஊன்று போல் இரண்டு பேருக்கும் வாங்கி கொடுத்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மனிதநேயர்
ஒரு பக்கம் பயன்படுத்தும் ஊன்று கோல் ஒருவருக்கு வாங்கிக் கொடுத்தார்.
தொழு நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிகழ்ச்சியில்,
கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் குமார்,
சமூக ஆர்வலர் ஆடலரசு,
மனிதநேய நண்பர் கோவிந்தராஜ் ஆகியோரும் நம்முடன் பங்கேற்றனர்.
உதவிக்கரம் நீட்டிய மனிதநேயர்கள், உடன் இருந்து உதவிய சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நம்முடைய உதவும் கைகள் சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.!
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது(திருக்குறள் 101)

பொருள்:
பிரதிபலன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு கைம்மாறாக மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது.
– புரசை வெங்கடேசன், உதவும் கைகள்.
– 9840914739
– 16.05.26




