சென்னையில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதி கண்ணகி நகர்.
இங்கு சாலையோரமாக உணவு கடை நடத்தி வருபவர், பவானி.
இவருக்கு வாய் பேசாத காது கேட்காத மகன் உள்ளான். இவன் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறான்.
பவானி, சிறந்த சமையல் கலைஞர் ஆவார். தன்னுடைய வாழ்வாதாரத்தை அவரே உருவாக்கிக் கொண்டார்.

மேற்கூரை இல்லாமல் திறந்தவெளியில் கடை நடத்தி வருவதால், வெயில் காலத்தில் சிரமப்படுகிறார்.
மழைக்காலங்களில் வருமானம் அறவே தடைபட்டு கஷ்டப்படுகிறார்.
இவருக்கு ஒரு தள்ளுவண்டி
இருந்தால் வருடம் முழுவதும் தடை இன்றி வருமானம் ஈட்டிக் கொள்வார். அவருடைய குழந்தைக்கு ஏற்ற உயர் கல்வி நிறுவனங்கள் தொலைதூரத்தில் தான் உள்ளன. தன் மகனின் எதிர்காலத்திற்காக சேமித்தும் வைத்துக்கொள்வார்.
இந்த குடும்பத்துக்கு தள்ளுவண்டி வாங்கி கொடுத்து, ஓர் ஒளி விளக்கு ஏற்றி வைக்கும்படி வேண்டுகிறோம்.
– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
18.04.26



