சென்னை ஓட்டேரியில், மனநலம் பாதிக்கப்பட்டோரை வைத்து பராமரிக்கும் இல்லம் உள்ளது. இங்கு 60 பேர் உள்ளனர்.
இவர்கள் எளிதாக உணவு உட்கொள்ளும் வகையில், உணவு பரிமாறப்படும் இடத்தில் டேபிள், சேர் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நாற்காலிகள் (Chairs) மிகவும் பழுதடைந்துள்ளன. இவற்றிற்கு பதிலாக புதிதாக 60 சேர்கள்
வாங்கித் தரும்படி இந்தக் காப்பக நிர்வாகி நம்மிடம் கேட்டார்.
எங்கள் வீட்டு அருகில் உள்ள இந்த காப்பகத்தில், மனநலம் பாதிக்கப்பட்டோர்
நன்கு கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு செய்யப்படும் உதவியானது, ஓர் உரித்தான நற்செயலாகும்.
எனவே, இவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட மனித நேய நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
– புரசை வெங்கடேசன்
– உதவும் கைகள்
– 9840914739
– 28.11.25




