முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த முதியோர்களுக்கு 15 படுக்கைகள் (Beds)வேண்டும்!

சென்னை, திருமுல்லைவாயலில் செயல்படும் ஸ்ரீ சாய்ராம் முதியோர் இல்லத்தில் 85 முதியவர்கள் உள்ளனர். இவர்கள் வயது 60 முதல் 90 வரை ஆகும். பெரும்பாலானோர் வயது முதிர்ந்த பெண்மணிகள் ஆவர்.

தூய்மையாக காப்பகத்தை பேணி, தரமான உணவு வழங்கும் மையங்களில் இதுவும் ஒன்று. பலமுறை நாம் இங்கு சென்று இங்குள்ள முதியோர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்துள்ளோம்.

இங்குள்ள 15 படுக்கைகள் (Beds)மிகவும் பழுது அடைந்து உள்ளதால், புதிய படுக்கைகள் வாங்கித் தரும்படி அந்த இல்ல நிர்வாகி நம்மிடம் கேட்டார்.

படுக்கைகள் விற்கும் சில கடைகளுக்கு சென்று விசாரித்த போது, தரமான ஒரு படுக்கை 3000 ரூபாய் விலை கொண்டதாக இருந்தது.

வயது முதிர்ந்த முதியவர்கள் நிம்மதியாக உறங்கி விழிக்கும் வகையில், உங்களால் முடிந்த எண்ணிக்கையில் படுக்கை வாங்கி கொடுத்து உதவும்படி மனிதநேய நண்பர்களாகிய உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
18.11.25

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91