கண்ணகி நகர், பெரும்பாக்கம் சென்று ஏழை ,எளிய மக்களுக்கு உதவினோம்.!

மனிதநேய நண்பர்களே வணக்கம்,

சென்னை மாநகரில் கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகள் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகள் என்பதே நீங்கள் அறிவீர்கள்.

கண்ணகி நகரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பாலமுருகன் நம்மை அழைத்து,
மிகவும் நோயுற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவி கேட்டார்.

அவர் கேட்ட உதவிகளை மனிதநேய நண்பர்களாகிய உங்களிடம் தெரிவித்தோம்.

நீங்கள் வழங்கிய பொருட்களுடன் நண்பர் கோவிந்தராஜ் காரில் புறப்பட்டோம்.

கண்ணகி நகர் சென்றதும் பாலமுருகன் எங்களுடன் இணைந்து கொண்டார்.

கண்ணகி நகரில் ஸ்பெஷல் குழந்தை உள்ள சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அந்தத் தாயார் குழந்தை நன்கு தூங்கும் வகையில் படுக்கை (Air bed) கேட்டிருந்தார்.அதை வழங்கினோம்.

அங்கிருந்து பெரும்பாக்கம் சென்றோம். அங்கு ஒரு பெண் மிகச் சிறிய பெட்டிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள், நோயுற்று படுக்கையில் இருக்கும் மாற்றுத்திறனாளி கணவர் ஆகியோர் உள்ளனர். சிறு கடையில் தனி ஆளாக சம்பாதித்து கணவரையும் பிள்ளைகளையும் நன்கு பார்த்துக் கொள்கிறார்.
வீட்டையும் கடையையும் மிகத் தூய்மையாக வைத்திருந்தார். அவரைப் பாராட்டினோம்.
அவருடைய கணவருக்கு ஒரு படுக்கை மற்றும் அந்த வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசியுடன் ரூபாய் 1000
பணமும் வழங்கினோம்.

அதே பகுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ஆளுக்கு ஒரு அரிசி மூட்டை வழங்கினோம்.

இன்னொரு வீட்டுக்கு சென்று அங்கிருந்த மாற்றுத் திறனாளிக்கு நவீன ஊன்றுகோலுடன் ஒரு மூட்டை அரிசியும் வழங்கினோம்.

புளியந்தோப்பை சேர்ந்த ஒரு வயதான
பெண்ணும் Air bed கேட்டிருந்தார்.
பெரும்பாக்கத்தில் இருந்து நேராக அங்கு சென்று அவருக்கும் அதை வழங்கினோம்.

மனித நேயர் நீலேஸ்( திருவள்ளூர்), மனித நேயர்
ராஜசேகர் (நங்கநல்லூர்)
மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் பலர் மேற்கண்ட உதவிகள் நடைபெற காரணமாக இருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் நம்முடைய உதவும் கைகள் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகள் பாராட்டுகள்.!

“அன்று அறிவாம் என்னாது
அறம்செய்ய மற்றுஅது

பொன்றும்கால் பொன்றாத் துணை.(திருக்குறள் 36)

பொருள் :
அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறம் செய்யுங்கள். அதுதான் கடைசி காலத்தில் உறுதுணையாக வந்து நிற்கும்.

– புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
04.01.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91