கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் * மூதாட்டிக்கு நிழல் குடை வழங்கினோம்!*

கருணை உள்ளம் கொண்ட அரும்பாக்கம் மேடம் சமூகத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பாக, பூ வியாபாரம் செய்தோ கைத்தொழிலில் ஈடுபட்டோ உழைத்து வாழும் வயது முதிர்ந்த பெண்களுக்கு உதவி செய்து வருகிறார்.

வெயில் காலம் நெருங்கி விட்டதால்,
கோயில் வாசலில் தினந்தோறும் தவறாமல் காலையிலும் மாலையிலும் பூ வியாபாரம் செய்யும் வயதான பெண்ணுக்கு நிழல் குடை வழங்கும்படி சொல்லி,
அதற்கான தொகையை அனுப்பி வைத்தார்கள்.

சென்னை, மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் வாசலில் அஞ்சலை அம்மாள் (வயது 72) என்ற முதியபெண்மணி கடந்த 30 ஆண்டுகளாக தினந்தோறும் அதிகாலை வேளயில் இருந்து மதியம் வரையும் பிற்பகல் 4.00 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் பூ வியாபாரம் செய்து வருவதை அறிந்தோம்.
வெயில் காலத்திலும் மழைக்காலத்திலும் அவர் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்தது.

திடீரென அங்கு சென்று
நிழல் கூடை நிறுவி கொடுத்தோம்.

கேட்காமலே உதவி செய்கிறீர்களே நீங்கள் யார் என்று அந்த மூதாட்டி கேட்டார்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன்.
அரும்பாக்கம் மேடம் என்று சொல்லி அவர்களுடன் பேச வைத்தோம். மனிதநேய மிகுந்த அந்த அம்மையாருக்கு
தன் நெஞ்சார்ந்த நன்றியை அஞ்சலை அம்மாள் தெரிவித்துக் கொண்டார்கள்.
மனிதநேயர் சம்பத் (அசோக்நகர்)உடன் வந்திருந்தார். உதவும் கைகள் நண்பர்கள் சார்பில்
நாமும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து விடை பெற்றோம்.

அன்றிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை (திருக்குறள் 36).

பொருள்:
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அறம் செய்யுங்கள். ஒருவருடைய இறுதி காலத்தில் அதுதான் வந்து துணை நிற்கும்.

– புரசை வெங்கடேசன்,
உதவும் கைகள்,
9840914739
05.03.26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Donate Now

Become a Volunteer

Join us as a volunteer at Purasai Trust and be the change that uplifts communities.

Donate Now

Help

Become a Volunteer

Volunteer Form
+91